Search This Blog
24 June 2014
எனது வ(ரி)லிகள்
காதலில் தோற்றால் வருத்தம்,
அவ்வலியே உன்னைத் திருத்தும்.
நெஞ்சினில் காதல் உறுத்தும்-பின்
வாழ்வைப் பற்றி உணர்த்தும்.
பணம் தான் அவளின் தேவை,
என் காதில் வைத்தாள் பூவை,
பெண்ணே உன்னை மறப்பேன்.
மீண்டும் புதியதாய் பிறப்பேன்.
காதல் என்பது கணக்கு-அதில்
தேர்ச்சியே இல்லை எனக்கு.
வெறும் வெட்டிக் கதைகள் எதற்கு,
இனி உன்னை நீயே செதுக்கு.
03 June 2014
02 June 2014
!!!===((( குட்டிக்கவிதை )))===!!!
காவிரியாய் கண்களில் காதல் வழிய
கங்கையாய் நெஞ்சில் காதல் பெருக்கெடுக்க
கூவமாய் மாறிப்போனது
வாழ்க்கை
கங்கையாய் நெஞ்சில் காதல் பெருக்கெடுக்க
கூவமாய் மாறிப்போனது
வாழ்க்கை
31 May 2014
=== இது கவியல்ல நிஜம் ===
பிறப்பு என்பது இன்பமடா
இறப்பு என்பது சோகமடா
பிறப்பும்,இறப்பும் இயற்கையடா
அதை நீ உணர வேண்டுமடா
வென்றால் திமிரில் ஆடாதே
தோல்விக்கு பயந்து ஓடாதே
வெற்றியும்,தோல்வியும் சகஜம்டா
இதுவே வாழ்வின் நியதியடா
கவலையில் மூழ்கி வாடுகிறான்-பின்
மதுக்கடை தேடி ஓடுகிறான்
மருந்தென மதுவை அருந்துகிறான்-அது
விஷமென தெரிந்தும் விரும்புகிறான்
மங்கையை கண்டால் மயங்குகிறான்
மனம் விட்டு பேச தயங்குகிறான்
இயந்திரம் போல் அவன் இயங்குகிறான்
இன்பம் காணவே ஏங்குகிறான்
உழைத்திட இருகரம் உனக்கிருக்கு
அடுத்தவன் உதவி ஏன் உனக்கு
உன்னால் முடியும் வெற்றி பெற
வெற்றிக் கதவினை முட்டி திற
இறப்பு என்பது சோகமடா
பிறப்பும்,இறப்பும் இயற்கையடா
அதை நீ உணர வேண்டுமடா
வென்றால் திமிரில் ஆடாதே
தோல்விக்கு பயந்து ஓடாதே
வெற்றியும்,தோல்வியும் சகஜம்டா
இதுவே வாழ்வின் நியதியடா
கவலையில் மூழ்கி வாடுகிறான்-பின்
மதுக்கடை தேடி ஓடுகிறான்
மருந்தென மதுவை அருந்துகிறான்-அது
விஷமென தெரிந்தும் விரும்புகிறான்
மங்கையை கண்டால் மயங்குகிறான்
மனம் விட்டு பேச தயங்குகிறான்
இயந்திரம் போல் அவன் இயங்குகிறான்
இன்பம் காணவே ஏங்குகிறான்
உழைத்திட இருகரம் உனக்கிருக்கு
அடுத்தவன் உதவி ஏன் உனக்கு
உன்னால் முடியும் வெற்றி பெற
வெற்றிக் கதவினை முட்டி திற
=== பத்திரமாய் உனை பார்த்துக்கொள் ===
பள்ளியில் படிக்கும் வயதினிலே
காதல் பூத்திடும் மனதினிலே
சரியெது தவறேது தெரியாது
படிப்பினில் கவனம் நுழையாது
தொட்டுப் பேச நினைக்கும் மனம்
கட்டில் ஆசையை தூண்டும் தினம்
காதல் வந்தால் கூடும் கனம்
கண்ணீர் சிந்தி பெருகும் ரணம்
உன் அழகினை மெல்ல ரசித்திடுவான்
தலை முதல் கால் வரை ருசித்திடுவான்
உன் இதழ்களில் பழரசம் குடித்திடுவான்
உனை யாரென ஒருநாள் கேட்டிடுவான்
பட்டினி கிடந்த வயிற்றிற்கு
பாலெது பழமெது தெரியாது
சட்டென மென்று தின்றுவிடும்
பட்டென பறந்து சென்றுவிடும்
காதல் என்பதோர் அழகிய இலக்கணம்
ஆணும் பெண்ணும் சமமாய் இருக்கணும்
அன்பினில் இருவரும் மெழுகாய் உருகணும்
காதலின் ஒளி நிலவை வீழ்த்தனும்
கற்பு என்பது புனிதமடி-அதை
கட்டிக் காப்பது கடினமடி
பத்தினியாய் நீ உருவெடுக்க
பத்திரமாய் உனை பார்த்துக்கொள்
காதல் பூத்திடும் மனதினிலே
சரியெது தவறேது தெரியாது
படிப்பினில் கவனம் நுழையாது
தொட்டுப் பேச நினைக்கும் மனம்
கட்டில் ஆசையை தூண்டும் தினம்
காதல் வந்தால் கூடும் கனம்
கண்ணீர் சிந்தி பெருகும் ரணம்
உன் அழகினை மெல்ல ரசித்திடுவான்
தலை முதல் கால் வரை ருசித்திடுவான்
உன் இதழ்களில் பழரசம் குடித்திடுவான்
உனை யாரென ஒருநாள் கேட்டிடுவான்
பட்டினி கிடந்த வயிற்றிற்கு
பாலெது பழமெது தெரியாது
சட்டென மென்று தின்றுவிடும்
பட்டென பறந்து சென்றுவிடும்
காதல் என்பதோர் அழகிய இலக்கணம்
ஆணும் பெண்ணும் சமமாய் இருக்கணும்
அன்பினில் இருவரும் மெழுகாய் உருகணும்
காதலின் ஒளி நிலவை வீழ்த்தனும்
கற்பு என்பது புனிதமடி-அதை
கட்டிக் காப்பது கடினமடி
பத்தினியாய் நீ உருவெடுக்க
பத்திரமாய் உனை பார்த்துக்கொள்
!!!===((( பணமரம் தேடி )))===!!!
என் இரு கையில் அணைத்து,
என்னவளை
என் இதய
இருக்கையில் அமரவைத்தேன்,
அவள் இறக்கை முளைத்து
பறந்து போனாள்.
பணமரம் தேடி
என்னவளை
என் இதய
இருக்கையில் அமரவைத்தேன்,
அவள் இறக்கை முளைத்து
பறந்து போனாள்.
பணமரம் தேடி
!!!=== பேருந்து பயணத்தில் ===!!!
பெண்களை பின்னுக்கு தள்ளியது
சமூகம் மட்டுமல்ல
பேருந்து நடத்துனரும் தான்
சமூகம் மட்டுமல்ல
பேருந்து நடத்துனரும் தான்
!!!===((( பெண்களே வல்லவர்கள் )))===!!!
உண்மையை
மூடி மறைப்பதில்
பெண்கள் தான் வல்லவர்கள்
உதட்டில் சாயம்
முகத்தில் சாயம்
நகத்தில் சாயம்
மூடி மறைப்பதில்
பெண்கள் தான் வல்லவர்கள்
உதட்டில் சாயம்
முகத்தில் சாயம்
நகத்தில் சாயம்
=== சுமை தூக்குவோர் சங்கம் ===
சிறகுகளுள்ள பறவைகள் நாங்கள்
சிறையில் வாழ்கின்றோம்
சின்னஞ்சிறு பூக்கள் நாங்கள்
சிதறி விழுகின்றோம்
அம்மா என்று சொல்வதற்குள்ளே
ஆங்கிலம் பேசணுமாம்
செந்தமிழ் நாட்டின் முகத்தில்
ஆங்கில கரியைப் பூசனுமாம்
கவலைகளறியா சிறு வயதில்
கலங்கி அழுகின்றோம்
வீட்டுப் பாடம் செய்தே தினம்
மயங்கி விழுகின்றோம்
பால் குடிக்கும் பருவத்தில்
பள்ளிக்கூடம் அனுப்புறாங்க
பச்சப்பிள்ள நாங்க
தொல்ல பண்ணாதீங்க
கல்லூரிக்கு போறவங்க
கைவீசி போறாங்க
பள்ளிக்கூடம் போற நாங்க
பாரத்த சுமக்கரமே
புல்வெளி போன்ற மெல்லிய பாதம்
காலணி சிறையில் சிக்கியதே
பனித்துளி போல குளிர்கிற இதயம்
நெருப்புக் குழம்பை கக்கியதே
முதுகில் மூட்டையை சுமந்து
சாலையில் மெல்ல தவழ்ந்து
பள்ளிக்கு செல்லும் மழலைகள்
மனதிற்குள் பல கவலைகள்
சிறையில் வாழ்கின்றோம்
சின்னஞ்சிறு பூக்கள் நாங்கள்
சிதறி விழுகின்றோம்
அம்மா என்று சொல்வதற்குள்ளே
ஆங்கிலம் பேசணுமாம்
செந்தமிழ் நாட்டின் முகத்தில்
ஆங்கில கரியைப் பூசனுமாம்
கவலைகளறியா சிறு வயதில்
கலங்கி அழுகின்றோம்
வீட்டுப் பாடம் செய்தே தினம்
மயங்கி விழுகின்றோம்
பால் குடிக்கும் பருவத்தில்
பள்ளிக்கூடம் அனுப்புறாங்க
பச்சப்பிள்ள நாங்க
தொல்ல பண்ணாதீங்க
கல்லூரிக்கு போறவங்க
கைவீசி போறாங்க
பள்ளிக்கூடம் போற நாங்க
பாரத்த சுமக்கரமே
புல்வெளி போன்ற மெல்லிய பாதம்
காலணி சிறையில் சிக்கியதே
பனித்துளி போல குளிர்கிற இதயம்
நெருப்புக் குழம்பை கக்கியதே
முதுகில் மூட்டையை சுமந்து
சாலையில் மெல்ல தவழ்ந்து
பள்ளிக்கு செல்லும் மழலைகள்
மனதிற்குள் பல கவலைகள்
ஆண்களின் நிலை தான் பாவமடா
கவலைகள் என்னை சூழ்ந்ததினாலே
கண்ணீர் என்னுள் நிரம்பியதே...!
கனவுகள் தினமும் பூப்பதினாலே
கடமைகள் நிறைய இருக்கிறதே...!
மஞ்சள் தாலியை கட்டியதாலே
மண்டியிட்டே கிடக்கின்றோம்...!
மான ரோஷம் இருந்தும் ஏனோ
மௌனம் மட்டும் காக்கின்றோம்...!
ஆட்டிப்படைக்கும் மனைவியிடத்தில்
அடங்கிச் செல்வது ஆண்களடா...!
ஆடம்பரத்தை விரும்பும் பெண்ணால்
ஆண்களின் நிலையோ ஆண்டியடா...!
அச்சம், மடம், நாணம் இருந்தது
அன்றைய கால பெண்ணிடத்தில்,
கட்டிய கணவனை எட்டி உதைத்து,
கலவரம் தூண்டும் பெண்ணின்று...!
திருமணம் என்பதே சோகமடா,- அதில்
ஆண்களின் நிலை தான் பாவமடா...!
பணியை முடித்து இல்லம் நுழைந்ததும்
பணிந்து போவதே வழக்கமடா...!
இதயம் மரித்த பெண்ணினத்தால்
இன்பம் தொலைத்தது ஆணினங்கள்...!
இறைவா விழியை திறந்து விடு
இனிமேல் வெளிச்சம் பிறக்கட்டும்....
=== அன்புள்ள தொப்புள்கொடி உறவுக்கு ===
கடனால தொல்ல
தெனம் சந்தோஷமில்ல
கண்ணீர் விட்டு நா
கடல் தாண்டி போறான்
குடிகார அப்பன்கிட்ட
அடி வாங்கும் ஆத்தா
அடிவயிறு எரியுது
அவ அழறத பாத்தா
பசியோடு பல நாளும்
பட்டினியா நா கெடந்தான்
பழைய சோறு கெடச்சது போல
பகல் கனா நா கண்டன்
கம்மங்கூல கரச்சி
வெங்காயத்த உரிச்சி
கொடுத்தாலே எனக்கு
குடிச்சன் ரெண்டு மடக்கு
ஆத்தாவுக்கும் வேணுமுன்னு
அளவாத்தான் நான் குடிச்சன்
அவ வயிறு நெறஞ்சதுமே
என் வயிறும் நெறஞ்சிடுதே
நேரத்துக்கு நீ ஒழுங்கா
சாப்பிட்டா போதுமம்மா
உனக்காக தானே - என்
ஒத்த உசுரு வாழுதம்மா
என் நெனப்பால தெனம்
நீ பட்டினியா கெடக்காத
அழுதுகிட்டே அப்படியே
தல சாஞ்சி படுக்காத
சொந்தபந்தம் பலரிருந்தும்
சொல்லும்படி யாருமில்லை
உண்மைய சொல்லனுமுன்னா
உருவினறால எந்த பயனுமில்லை
கட்டுகட்டா காசுருந்து-உன்ன
கடவுளுன்னு சொல்லுமடா
காசிலாம நீ இருந்தா
காரி மூஞ்சில் துப்புமடா
என் தாய காப்பாத்த
நா துபாய்க்கு போறன்
கடனெல்லாம் அடச்சதுமே
நா திரும்பி வாறன்
தெனம் சந்தோஷமில்ல
கண்ணீர் விட்டு நா
கடல் தாண்டி போறான்
குடிகார அப்பன்கிட்ட
அடி வாங்கும் ஆத்தா
அடிவயிறு எரியுது
அவ அழறத பாத்தா
பசியோடு பல நாளும்
பட்டினியா நா கெடந்தான்
பழைய சோறு கெடச்சது போல
பகல் கனா நா கண்டன்
கம்மங்கூல கரச்சி
வெங்காயத்த உரிச்சி
கொடுத்தாலே எனக்கு
குடிச்சன் ரெண்டு மடக்கு
ஆத்தாவுக்கும் வேணுமுன்னு
அளவாத்தான் நான் குடிச்சன்
அவ வயிறு நெறஞ்சதுமே
என் வயிறும் நெறஞ்சிடுதே
நேரத்துக்கு நீ ஒழுங்கா
சாப்பிட்டா போதுமம்மா
உனக்காக தானே - என்
ஒத்த உசுரு வாழுதம்மா
என் நெனப்பால தெனம்
நீ பட்டினியா கெடக்காத
அழுதுகிட்டே அப்படியே
தல சாஞ்சி படுக்காத
சொந்தபந்தம் பலரிருந்தும்
சொல்லும்படி யாருமில்லை
உண்மைய சொல்லனுமுன்னா
உருவினறால எந்த பயனுமில்லை
கட்டுகட்டா காசுருந்து-உன்ன
கடவுளுன்னு சொல்லுமடா
காசிலாம நீ இருந்தா
காரி மூஞ்சில் துப்புமடா
என் தாய காப்பாத்த
நா துபாய்க்கு போறன்
கடனெல்லாம் அடச்சதுமே
நா திரும்பி வாறன்
=== சச்சின் எனும் புயல் ===
கிரிக்கெட் எனும் கடலில்
24 வருடங்களாக மையம் கொண்ட
சச்சின் எனும் பெயர் கொண்ட
ராட்சத புயல்
(16-11-2013) இன்றோடு கரையை கடந்தது
பலரின் மனதை
அடியோடு பிடுங்கிச் சென்றது...
கிரிக்கெட்டை விளையாட்டாக நேசிக்காமல்
தெய்வமாக நேசித்த மா மனிதன் சச்சின்
வாழ்க பல்லாண்டு
I LOVE SACHIN
24 வருடங்களாக மையம் கொண்ட
சச்சின் எனும் பெயர் கொண்ட
ராட்சத புயல்
(16-11-2013) இன்றோடு கரையை கடந்தது
பலரின் மனதை
அடியோடு பிடுங்கிச் சென்றது...
கிரிக்கெட்டை விளையாட்டாக நேசிக்காமல்
தெய்வமாக நேசித்த மா மனிதன் சச்சின்
வாழ்க பல்லாண்டு
I LOVE SACHIN
=== என்னவனே என் காதலனே ===
என்னவனே!
உன் பார்வையால் பற்றிக்கொண்ட
காதலெனும் தீயை,
என் பெற்றோர்கள் போராடி அணைத்தும்,
இன்னும் புகைந்து கொண்டே தான் இருக்கிறது
உன் நினைவுகள்.............
உன் பார்வையால் பற்றிக்கொண்ட
காதலெனும் தீயை,
என் பெற்றோர்கள் போராடி அணைத்தும்,
இன்னும் புகைந்து கொண்டே தான் இருக்கிறது
உன் நினைவுகள்.............
குப்பையிலே மிதக்கின்றது எங்கள் சிட்டி
குப்பையின்றி கிடக்கின்றது
குப்பைத் தொட்டி
குப்பையிலே மிதக்கின்றது
எங்கள் சிட்டி
குப்பையை குப்பை தொட்டியில் போட
எனக்கும் ஆசை தான்-ஆனால்
கூச்சம் என்னுள் குடியேறிவிட்டது,
நானும் சக மனிதன் தானே...
குப்பைத் தொட்டி
குப்பையிலே மிதக்கின்றது
எங்கள் சிட்டி
குப்பையை குப்பை தொட்டியில் போட
எனக்கும் ஆசை தான்-ஆனால்
கூச்சம் என்னுள் குடியேறிவிட்டது,
நானும் சக மனிதன் தானே...
=== புதுயுகம் தேடும் பெண்ணே ===
புதுயுகம் தேடும் பெண்ணே
நீ புதர்களில் விழவேண்டாம்
ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று
நீ கவலைப்பட வேண்டாம்
கடவுள் கொடுத்த பாக்கியம்
பெண்ணே கருவறை தானடி
கருவை சுமக்கும் பெண்ணே
நீ கடவுள் தானடி
விழிகளில் வழிந்திடும் கண்ணீர்
வலிகளின் அடையாளம்
முயற்சிகளில்லா வாழ்க்கை
முற்றிலும் அவமானம்
வளையல் அணியும் கைகள்
வானை எட்டிப் பிடிக்கிறதே
கொலுசை அணியும் கால்கள்
விண்ணில் நடக்க துடிக்கிறதே
பட்டம் பெற்ற பெண்ணே
சிறு வட்டம் அல்ல உலகம்
சோம்பலை தூக்கி எறிந்தால்
உன் சோதனை காலம் விலகும்
அடுப்படி மட்டும் உலகல்ல
அகிலமும் உந்தன் பெயர் சொல்ல
எதிர்வரும் தடையை எதிர்கொள்ள
எழுந்து வா நீ வெல்ல
ஹைக்கூ
பட்டப்பகலில்
வெட்டிக்கொலை
மரங்கள்
****************************************************************************
திமிறி எழும்
திணறி விழும்
கதிரவன்
****************************************************************************
வீட்டுக்கொரு
ஹிட்லர்
மனைவி
****************************************************************************
விரல் பிடித்து
நடக்கின்றது
பேனா
****************************************************************************
சட்டையை கழட்டி
மண்டையை பிளந்தேன்
தேங்காய்
வெட்டிக்கொலை
மரங்கள்
****************************************************************************
திமிறி எழும்
திணறி விழும்
கதிரவன்
****************************************************************************
வீட்டுக்கொரு
ஹிட்லர்
மனைவி
****************************************************************************
விரல் பிடித்து
நடக்கின்றது
பேனா
****************************************************************************
சட்டையை கழட்டி
மண்டையை பிளந்தேன்
தேங்காய்
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் !
தண்ணீர் தண்ணீர் தண்ணீர் !
தண்ணீரின்றி கண்ணீர்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் !
கண்ணீர் கூட தண்ணீர்.
தோண்ட, தோண்ட சுரந்திடுமே,
குடிக்க, குடிக்க இனித்திடுமே.
பூமிக்கடியில் பிறந்திடுமே,
உயிர்கள் வாழ உதவிடுமே.
தண்ணீரின்றி வாழ்வா-அது
சாத்தியமில்லையாட.
தண்ணீரின்றி போனால்,
உலகம் சமாதியாகுமடா.
பூமிக்கடியில் எங்கும்
புதைந்துகிடக்கும் தங்கம்,
தோண்ட, தோண்ட பொங்கும்,
தண்ணீரே! வாழ்வின் அங்கம்...
தண்ணீரின்றி கண்ணீர்.
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் !
கண்ணீர் கூட தண்ணீர்.
தோண்ட, தோண்ட சுரந்திடுமே,
குடிக்க, குடிக்க இனித்திடுமே.
பூமிக்கடியில் பிறந்திடுமே,
உயிர்கள் வாழ உதவிடுமே.
தண்ணீரின்றி வாழ்வா-அது
சாத்தியமில்லையாட.
தண்ணீரின்றி போனால்,
உலகம் சமாதியாகுமடா.
பூமிக்கடியில் எங்கும்
புதைந்துகிடக்கும் தங்கம்,
தோண்ட, தோண்ட பொங்கும்,
தண்ணீரே! வாழ்வின் அங்கம்...
ஹைக்கூ
இளமையில் இனிக்கும்
முதுமையில் கசக்கும்
தனிமை
**********************************
பிரிவோம்
சந்திப்போம்
கடிகார முற்கள்
**********************************
வாழ்வதற்குள்
முடிந்துவிட்டது
வாழ்க்கை
***********************************
முதுமையில் கசக்கும்
தனிமை
**********************************
பிரிவோம்
சந்திப்போம்
கடிகார முற்கள்
**********************************
வாழ்வதற்குள்
முடிந்துவிட்டது
வாழ்க்கை
***********************************
ஹைக்கூ
யாமிருக்க
பயமேன்
கல்வி
*******************
அன்று பெருவெள்ளம்
இன்று பெரும்பள்ளம்
நதிகளின் விதி
******************
கறுப்புத்தங்கம்
கவிதைச்சிங்கம்
வைரமுத்து
*****************
ஏழையாய் இருந்தால் புறக்கணிக்கும்
பணக்காரனாய் இருந்தால் அரவணைக்கும்
உறவுகள்
*****************
தூணிலும் இருக்கும்
துரும்பிலும் இருக்கும்
ஊழல்
Subscribe to:
Posts (Atom)


