Search This Blog

27 September 2017

கிலோபைட் கிறுக்கல்கள - 35


புத்த அகம் போல்
என் புத்தகங்கள்
மோன நிலையில்...





கிலோபைட் கிறுக்கல்கள - 34

உன் உதடுகளால் ஓர் உயிலெழுது
உன் முத்தங்கள்
எனக்கானவையென்று...



கிலோபைட் கிறுக்கல்கள - 33

உன் இதழோடு 
என் இதழ் பதித்து
எனக்கான தாகத்தை 
தணித்துக் கொண்டிருக்கிறேன்
இந்த வெயில் காலங்களில்
#இளநீர்




கிலோபைட் கிறுக்கல்கள - 32


உறைந்து போன 
என் உதிரத்தில் தான்
தயாரிக்கப்படுகின்றன
உனக்கான
சிவப்பு நிற
உதட்டுச் சாயங்கள்....




கிலோபைட் கிறுக்கல்கள - 31


"என் தாயின் 
நேர்த்திக் கடனுக்காக 
நான் உடைத்த தேங்காயில் 
சிதறிப்போனது
என் பகுத்தறிவு"




கிலோபைட் கிறுக்கல்கள - 30


எனக்குள் புதைந்திருக்கும்
அவள் நினைவுகளை
தூசு தட்டும்போதெல்லாம்
பறக்கத் தொடங்கினேன்
நானும் ஓர் பறவை(புழுதி)யாய்..




கிலோபைட் கிறுக்கல்கள - 29


பேருந்துப் படியிலிருந்து
நீ இறங்கியதைத்தான்
நான் சுருக்கமாக சொன்னேன்
நிலா தரையிறங்கியதென்று...




கிலோபைட் கிறுக்கல்கள - 28

காற்றில் அசையும்
சமாதானக் கொடியாய்
நரை முடிகள்..!

பூமியை நோக்கியே
கவிழ்ந்துக்கிடக்கி்றது
தலை...!
உற்று நோக்கினும்
மங்கலாய் விரியும்
பார்வை..!

கத்தி அழைப்பினும்
கண்டுக் கொள்ளாத
காது...!

நட்சத்திரங்களற்ற
இருளடர்ந்த வானமாய்
பொக்கை வாய்...!

மெலிந்த
ஒட்டடைக் குச்சியாய்
கைகளும்,கால்களும்,...!
நதிகளைப் போலவே
வற்றிக்கிடக்கிறது
வயி்று...!

மூங்கிலைப் போலவே
வளைந்துக்கிடக்கிறது
முதுகு...!
வலுவிழந்த வேர்களாய்
படர்ந்திருக்கிறது
நரம்புகள்...

முதுமையின் கொடுமையை
வேண்டாமென்கிறதோ...???
நடுங்கும் தலையசைவுகள்...

உள்ளங்கைகளின் ரேகையனைத்தும்
இடம் பெயர்ந்து,
உடலெங்கும் அப்பிக்கிடக்கிறது...

சுருக்கம் என்பதை
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்,
அது முதுமையின்
அடையாளக் குறியீடுகள்...

மகன்களும்,மகள்களும்
புறக்கணிக்க
மருந்துகளும்,மாத்திரைகளும்
அரவணைக்கிறது...

முக் கால்களில் நடக்கும்
இக்காலமதில்,
முற்றிலும் உணர்கிறேன்
முதுமையின் வலியை...

கருணை மனம் இல்லை
பிள்ளைகள் உள்ளத்தில்...
காத்திருக்கிறேன் நான்
முதியோர் இல்லத்தில்.....



கிலோபைட் கிறுக்கல்கள - 27


நீ குடிபுகும் வீட்டிற்கு
கிரகப்பிரவேஷம் எதற்கு
கும்பாபிஷேகம் தானே
செய்ய வேண்டும்...





கிலோபைட் கிறுக்கல்கள - 26


குவியாடி,குழியாடி
எதில் உற்று நோக்கினாலும்
அவள் வாயாடியாகத்தான் தெரிகிறாள்..
ஓவியம் வரையும் முயற்சியில்
என் முகமெங்கும்
வானவில் தெளிக்கிறாள்...
தன் மென் பற்களை
துலக்கும் தூரிகையால்
என் மீசையை சீவுகிறாள்..
என் பெருங்கால்களின் காலணியை
அவள் குறுங்கால்களை நுழைத்து
நடை பயில்கிறாள்...
அவள் பால்பற்களில்
கடித்த தழும்புகளெல்லாம்
என் ஆழ்மனதில் பத்திரமாய்
பதிய வைக்கிறாள்
கைக்குட்டையால்
என் கண்களைக்கட்டி
அவளின் உலகத்திற்குள்
எனை இழுத்துச் செல்கிறாள்...



கிலோபைட் கிறுக்கல்கள - 25

என் முதுகில் வரையும்
ஓவியர்களே,
சற்று நகருங்கள்
என் முகத்தில் கிறுக்குவதற்காக
குழந்தைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
# சுவர்களின் குரல்....




கிலோபைட் கிறுக்கல்கள - 24


அசையாத கல்லுக்கு
அபிசேகம் எதற்கு...!
அன்றாடம் செய்கின்றோம்
அர்ச்சனையும் அதற்கு..!

கைக்கூப்ப வேண்டாம்
உன் கையிரண்டை மடக்கு..!
கல்லுக்கு கேட்காது
உன் விரல் போடும் சொடக்கு...!

ஆறறிவும் அசைவின்றி
முடங்கித்தான் கிடக்கு...!
அறியாமை என்பதனை
அடியோடு முடக்கு...!

பகுத்தறிவு பற்றிய
பக்கங்களை புரட்டு...!
பார்வையற்ற கடவுளை
பாரை விட்டு விரட்டு...



கிலோபைட் கிறுக்கல்கள - 23


உன் கூந்தலைத் தழுவிய
நீரெல்லாம்
வாசனை திரவியமாகின்றது...



கிலோபைட் கிறுக்கல்கள - 22


அவள் விரல் பட்ட கோலப்பொடியை 
என் நெற்றியில் பூசிக்கொள்கிறேன் 
திருநீராக....!



கிலோபைட் கிறுக்கல்கள - 21


கவிஞனென்பதால் 
எனக்கும் தொடர்புகளுண்டு 
பல Pen-களோடு...




கிலோபைட் கிறுக்கல்கள - 20


என் காதுகளுக்குள்
உன் முகங்களை புதைக்கிறேன்,
பேசு என்ன வேண்டுமானாலும் பேசு
என் காதோடு உன் வாய் வைத்து
ரகசியம் பேசு....
நீ உரக்க கத்தினாலும்,
எனக்கு மட்டுமே கேட்கும்
மாய உலகமிது...
எலும்புகளே இல்லாத
உன் உடம்பினுள்தான்
ஏழு ஸ்வரங்களையும்
சுமந்து வருகிறாய்...
உன் முகம் புதைத்ததும்
என் அகமெங்கும்
சுகம் பரவிடச்செய்கிறாய்
என்னுள் நுழைகிறாய்
நீ...
உன்னுள் தொலைகிறேன்
நான்...
நீ உயிருல்ல உடலல்ல
ஒயருல்ல உடல்...
# Mobile Headset...





கிலோபைட் கிறுக்கல்கள - 19


விரல்களால் விரட்டுகிறாய்
விழிகளால் மிரட்டுகிறாய்
நீயென்ன 
காதல் பிசாசா...?




கிலோபைட் கிறுக்கல்கள - 18


தொப்பையும்,தப்பையும்
குறைப்பதே இல்லை
# காவலர்கள்///



கிலோபைட் கிறுக்கல்கள - 17


என்னவளே...!
நீ அமிலத்தை கொடுத்தால் கூட
அமிர்தமென பருகும்
பைத்தியக்காரன் நான்...




கிலோபைட் கிறுக்கல்கள - 16


என் கவிதைகளை பாராட்டி
நீ சான்றிதழ்கள் தர வேண்டாம்
உன் செவ்விதழ்களை தந்தாலே போதும்...



கிலோபைட் கிறுக்கல்கள - 15


வளர்ச்சியே வறட்சிக்கு காரணம்...!
எஞ்சி இருப்பதோ,
எங்கள் விவசாயிகளின் கோவணம்...
பசுமையை அழித்து தான்
பாரதம் ஓங்குமோ...!
காவிரிக்கு கையேந்தி
எங்களுயிர் நீங்குமோ..!
குளிர்பான நிறுவனங்கள்
உறிஞ்சுகிறது நீரை..!
அடியோடு பிடிங்கிடுமோ
விவசாய வேரை...!
தொண்டை தண்ணீ வற்ற
போடுகின்றோம் கோஷம்..!
ஒருபோதும் கலையாது
அரசாங்க வேஷம்...!
கட்டிடங்கள் எழுப்பியதால்
காடுகளும் நாசம்...!
கடும் பசியோடு பட்டினியில்
சாகட்டும் தேசம்...



கிலோபைட் கிறுக்கல்கள் - 14



நாம் எழுப்பும்
ஒவ்வொரு கட்டிடங்களும்
வயல்களின் சமாதிகள்...



11 July 2017

கிலோபைட் கிறுக்கல்கள - 13

முத்தத்தைப்பற்றி
கவிதை எழுதும்போதெல்லாம்
உன் உதட்டுச்சாயம் ஒட்டிக்கொள்கிறது
காகிதத்தில்....



கிலோபைட் கிறுக்கல்கள - 12

என் தாடிக்குள்
தவம் செய்து கொண்டிருக்கின்றன
அவளது நினைவுகள்...



கிலோபைட் கிறுக்கல்கள - 11

கொழுத்துப் போன
என் காதலுக்கு காரணம்
கொழுப்பு சத்து நிறைந்த
உன் முத்தங்களே...



கிலோபைட் கிறுக்கல்கள - 09

வெயில் காலங்களில் 
நீர் வேண்டும்...
மழை காலங்களில் 
நீ வேண்டும்...




கிலோபைட் கிறுக்கல்கள - 08

இரண்டு காதுகள் இருந்தும்
சில்லரை காசுகளின் சத்தத்தை
இதுவரை கேட்டதே இல்லை
அந்த பொக்கைவாய் கிழவியின்
சுருக்கு பை...




கிலோபைட் கிறுக்கல்கள - 07

பக்தர்களுக்கு 
யோக நிலையிலும்
சீடர்களுக்கு 
மோக நிலையிலும்
காட்சியளிக்கிறார்
கா(வி)ம சாமியார்...




கிலோபைட் கிறுக்கல்கள - 06

தனித்துவம் வாய்ந்த கவித்துவம்
அவள் வெட்கம்...
மகத்துவம் வாய்ந்த மருத்துவம்
அவள் முத்தம்...




கிலோபைட் கிறுக்கல்கள - 05

இன்று 
எந்த சுவையிலான முத்தம் 
நீ தரப்போகிறாய் என்று
நீ பூசும் இன்றைய உதட்டுச்சாயமே தீர்மானிக்கிறது...
# C For Chocolate...




கிலோபைட் கிறுக்கல்கள - 04

அளவுக்கு அதிகமாய்
காதல் கவிதைகள் சமைக்கும்
கூரு கெட்ட குக்கர் 
நான்...




10 July 2017

கிலோபைட் கிறுக்கல்கள - 03

பணமும்,படிப்புமே
பல சமயங்களில் 
காரணமாகின்றன
வாய் பிளப்பதற்கும்
வாய்ப்பிழப்பதற்கும்...


கிலோபைட் கிறுக்கல்கள - 02



சில Worry-களே
பல வரிகளுக்கும்
பல வலிகளுக்கும்
காரணமாகின்றன...



10 March 2017

உன் சமையலறையில் - 02

நீ அடுப்பை அணைப்பதற்குள் 
நான் உன் இடுப்பை அணைக்கிறேன் 
வா முத்தம் சமைப்போம்...



03 March 2017

உன் சமையலறையில் - 01

திண்ணத்திண்ண தெவிட்டுவதே இல்லை 
நீ சுடும் தோசைகள் 
எண்ணெய் ஊற்றி சுடுகிறாயா...? 
இல்லை 
உன்னை ஊற்றி சுடுகிறாயா...?




காதலிஸம் - 7

நான்கு துளைகள் கொண்ட 
ஆலோபிளாக் கல் 
அவள் இதயம்...



26 February 2017

மதக்காடு

மரங்களை அகற்றிவிட்டு 
மதங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறோம்
காடுகளில்....



25 February 2017

காதலிஸம் - 6

தட்கலில் வரும் 
உன் விக்கலை 
முத்தமிட்டு 
முற்றுப்புள்ளி வைக்கவா...?


காதலிஸம் - 5

சுகமான தற்கொலையென்பது 
உன் துப்பட்டாவில்
தூக்கிட்டுக்கொள்வதே....!



23 February 2017

அபியும் நானும் - 1

உப்பு மூட்டை தூக்கச்சொல்லி
அடம் பிடிக்கும்
நிலா மூட்டை அவள்...



காதலிஸம் - 4

தெரியாமல் முட்டிவிட்டு
கொம்பு முளைக்குமென 
மீண்டுமொருமுறை நீ முட்டியதில் 
திறந்து கொண்டது
என் இதயம்...




21 February 2017

காதலிஸம் - 3

தினமொரு அட்டைப் படம்
உடுத்திக்கொள்ளும்
கவிதைப் புத்தகம் நீ...




20 February 2017

காதலிஸம் - 2

என்னவளே...!
யார் கிள்ளினாலும் வலிக்கிறது
நீ கிள்ளினால் மட்டுமே
இனிக்கிறது....






19 February 2017

காதலிஸம் - 1

டிஜிட்டல் மயமாதலை
நான் அறவே வெறுக்கிறேன்
Whatsapp,Viber-ல் மட்டுமே 
நீ முத்தமிடுவதால்...!




15 February 2017

ரெட்டவரி நோட்டு -4

காதலென்பது Nature 
காதலியென்பவள் Torture...




13 February 2017

முத்தவியல்

அவளும்  நானும் 
கைது செய்யப்படலாம்
முத்தக் குவிப்பு வழக்கில்...



10 February 2017

Gr(h)ip

என்னவளே...!
ஒரு கைக்குழந்தையைப் போல
உன் இடுப்பில் அமர்ந்து கொண்டு
இறங்க மறுக்கின்றது
என் பார்வைகள்...




09 February 2017

ரெட்டவரி நோட்டு - 3

அவள் Look-ல் நுழைந்தேன் அவளுக்குள் தொலைந்தேன்...

08 February 2017

வலி வலியது

ஞாயிறும் திங்களுமாய்
அன்று...
திங்களும் ஞாயிறுமாய்
இன்று...
# அவளும் நானும்...



07 February 2017

ரெட்டவரி நோட்டு - 2

சிகரெட்டை விட்டுவிடு
சிகரத்தை தொட்டுவிடு...



04 February 2017

கூந்தலிசம் - 6

என்னவளே...!
உதிர்ந்த ரோஜா இதழ்களை
உலர்த்தி உன் கூந்தலுக்கு
உரமாக்கிக்கொள்
அதன் ஆத்மா சாந்தியடையட்டும்...



03 February 2017

ஹைக்கூ

சிறகுகளில்லா
பறவைகள்
# புழுதிகள்...