Search This Blog

28 July 2015

பொறியியலில் வென்ற அறிவியல்


உன் ஆக்சிஜன் பிரிந்ததால்,
உலக மக்களின் விழிகளில் அமில மழை....
உன் புத்தியீர்ப்பு விசையிடம்,
புவியீர்ப்பு விசையும் தோற்றுவிடும்.....

ஒரு ஏழையின் மூளை,
ஏவுகணையாகி விண்ணைத் தொட்டது.....
நீ அனுப்பிய அறிவியல் பறவைகளெல்லாம்,
அக்னிச் சிறகுகளை விரித்து,
வானில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றது....

ஆய்வுக் கூடங்களே உன் படுக்கையறை,
அறிவியலே உன் ஆசை மனைவி,
அவளை தலை முதல் கால் வரை,
ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி நீ....
உன் முதலிரவு  மட்டுமல்ல,
முழு இரவும் இவளோடு தான்....

அறிவியலில் எத்தனையோ,
மூலக்கூறுகள் இருக்கலாம் - ஆனால்
அறிவியலின் மூலக்கூறு நீ....

கோவிலின் கருவறையை விட புனிதமானது,
உனது அறிவுரைகள்.....
உனது எழுச்சித் தீபங்களால்,
இருள்களெல்லாம் மூழ்கிப்போனது....
 
இயந்திரக்கோளாறை சரி செய்யும் உனக்கு
இதயக்கோளறு.....
நீ ஆங்கிலேயனையும் ஆட்டிப்படைத்த
தமிழ் வரலாறு......

இயற்பியல் முடித்த பொறியியல் நீ.....!
பொறியியலில் வென்ற அறிவியல் நீ.....!
தாவரவியலை வளர்க்கச் சொன்ன புவியியல் நீ.....!
வேதியியலைக் கொண்டு உயிரியலை அழிக்காதவர்  நீ......



26 July 2015

ஹைக்கூ



வெட்கத்தின்
முதல் முடுச்சை அவிழ்க்கின்றது
முத்தம்......



23 July 2015

ஆடிப் பிரிவு



ஒற்றை ஜடையாய்
பின்னிப் பிணைந்திருந்த
புதுமணத் தம்பதிகள்
ரெட்டை ஜடையாய்
பிரிக்கப்பட்டனர்....
ஆடி மாசம்.....



ஆடித்தள்ளுபடி




காதலியே...!
ஆடித்தள்ளுபடியெல்லாம் எனக்கு தேவையில்லை
உன் ஆடைகளை,நீ தள்ளுபடி செய்தாலே போதும்...



நவீன தொழிற்சாலை



பொய்களை உற்பத்தி செய்யும்
நவீன தொழிற்சாலை
வாய்.....
32 வெள்ளையர்களை கொத்தடிமையாக்கி
முதலாளித்துவம் செய்கின்றது
நாக்கு.........



18 July 2015

கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலி

2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி


குமரியிலே வள்ளுவனும் 
குமுறிக்குமுறி அழுகின்றான், 
தரணியிலே தமிழ்ப்புலவன் 
தவறிய சேதி கேட்டு.






நெருப்பில்லாமல் புகையாது ---- வித்தியாசமான முயற்சி


சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!

காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்

ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான்  உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!

நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....
 
 
நீ பேசும் பேச்சில், 
நான் சாதமாய் குழைகின்றேன்....
நெய்யாய் உருகி உருகி,
உனை காதலிக்கின்றேன்.....!

என் அப்பள இதயத்தை,
நொறுக்கி விடாதே.....!
என் கண்கள் அவ்வப்போது
கண்ணீரை வடிகட்டுகின்றது

கடுகு தாளிப்பது போல்
ஏன் என்னை தாளித்தெடுக்கின்றாய்....? 
இடியாப்பத்தை விட சிக்கலானது
என் வாழ்க்கை....!

என் மனம் தேங்காய் துருவலை போல்
மென்மையானது....!
என் காதல் ஆப்பாயில் போல்
ஒரு தலையானது....!

மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்
வார்த்தைகள் சிக்கித் தவிக்கின்றன
உனை காணும்போதெல்லாம்

காரசாரமாய் நீ பேசும்போதெல்லாம்
வெங்காயம் அரியாமலேயே
கண்ணீர் விடுகின்றேன்

நானென்ன கசாயமா
பிறகேன் எனைப் பார்த்தாலே
நீ முகம் சுளிக்கின்றாய்

பாலில் கலந்த தண்ணீரைப் போல் தான்
என்னுள் இருக்கும் நீ,,, 
என்னிடமிருந்து உனைப் பிரிப்பது
அவ்வளவு சுலபமல்ல.....

கருவேப்பிலையாய் என் இதயத்தை
நீ உருவி எடுத்துக்கொண்டதால் தான்
நான் கொத்தமல்லியாய்  வதங்கிக்கிடக்கின்றேன்....

பெருங்காயமில்லா உணவில்
சுவையில்லை....!
பெரும்காயமில்லா மனதில்
சுகமில்லை....!

எளிதில் கெடாத புளியோதரையாய்
என் கற்பு மட்டும்
அதை உனக்கு மட்டுமே பரிமாற விரும்புகின்றேன்....!



குறிப்பு : படிப்பறிவில்லா ஒரு சமையல்காரி தன் காதலனுக்கு அவளுக்கு தெரிந்த வார்த்தையை கொண்டு ஒரு கவிதை எழுதுகின்றாள்......



16 July 2015

காதல் தத்துவம்


ஆண்களின் காதல் Fact...
பெண்களின் காதல் Act...





என் தலையெழுத்தும் மறைந்து போனதே



எல்லோருமே எனை தட்டிக்கொடுத்து
வேலை வாங்கிக் கொள்கின்றார்கள்
நானோ..!
அவர்களுக்காக உழைத்து உழைத்தே
தேய்ந்து போகின்றேன்....

உங்களிடம் அடி வாங்கி வாங்கி
எனக்கும் மறித்துப்போனது
என் தலையெழுத்தும் மறைந்து போனது....

எனை படைத்தவர்கள் விற்றுவிட்டதால் தான்
இந்த படித்தவர்கள் எனை பாடாய் படுத்துகின்றார்கள்
ஹிட்லரைப் போல...

எனை அடித்து துன்புறுத்த
பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகின்றார்கள்
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
சான்றிதழ்கள் வேறு....

எனது ஆயுட்காலம்
அவரவர் எனை கையாள்வதை பொறுத்தே
தீர்மானிக்கப்படுகின்றது....

பெண்ணே...!
நானென்ன உன் கணவனா..?
பிறகு ஏன்...?
எனை அடித்தே துன்புறுத்துகின்றாய்..
உன் குழந்தையை போல் நினைத்து
எனை இதமாய் வருடு....

ஆணே...!
நானென்ன உன் மனைவியா...?
பிறகு ஏன்
எனை அடித்தே காயப்படுத்துகின்றாய்
எனை உன் காதலியாய் நினைத்து
உன் விரல்களால் முத்தமிடு...

என் தாயுடனான உறவு நீடிக்கின்றது
இன்னம் வெட்டப்படாத
எனது தொப்புள்கொடியால்
USB CABLE....




04 July 2015

ஹைக்கூ


கண்மூடும் வரை, 
உனை காதலிப்பேன் 
கண்மூடித்தனமாய்....



விடைபெறா வினாக்கள்...


உன் விடைக்காக காத்திருக்கும்
வினா நான்....!
என் வினாக்கான விடை 
உன்னிடம் இல்லையெனில் 
உன் விடைக்கான வினாவாய் 
நானிருப்பேன்.....!
விடைபெறா வினாக்கள்.....