Search This Blog

30 March 2013

!!!===((( ஓவியம் )))===!!!






காகித மேடையில் 
விரல்கள் அரங்கேற்றிய 
நடனம்

!!!===((( மழை )))===!!!




ஓடும் மேகங்களின் 
வியர்வைத்  துளிகள்




15 March 2013

!!!!===((( என்னவளே அடி என்னவளே )))===!!!








உன்னைப் பார்த்த பொழுதினிலே 
உள்ளம் மெல்ல சிரிக்குதடி
உன்னைப் பிரியும் பொழுதினிலே 
உள்ளம் உடைந்து தெரிக்குதடி 

கண்களை சிமிட்டி நீ பார்த்தால் 
காதலும் உன்னைக் காதலிக்கும் 
கண்களை மூடி நீ உறங்க 
கடலும் உனக்குப்  பாய் விரிக்கும் 

அன்ன நடை நீ நடக்க 
ஆதவனும் உன் பின் தொடரும் 
அடடா உந்தன் அழகினிலே 
அடக்கம் கூட நிறைந்திருக்கும் 

பற்களின் அழகை பார்ப்பதற்கு 
பால்நிலவும் பூமிக்கு தரையிறங்கும் 
பளபளக்கும் உன் கன்னத்திலே 
பனித்துளி காலையில் சறுக்கி விழும் 

கூந்தலின் அழகை காண்பதற்கு 
கூகுளும் உன்னைத் தேடி வரும் 
குழந்தை போல் நீ சிரிக்கையிலே-என் 
குட்டி இதயம் சறுக்கி விழும்


!!!===((( ராஜ்கமல் )))===!!!

05 March 2013

===(((கண்டுபிடிக்க முடியவில்லையே! )))===



மருத்துவர்களால் கூட

கண்டுபிடிக்க முடியவில்லை

பெண்களின் இதயம்

துடிக்கின்றதா இல்லை

நடிக்கின்றதா என்று



!!!===((( ராஜ்கமல் )))===!!!

!!!===((( அலைகளில் உன் முகம் )))===!!!







நிலவே!

உன் முகம் பார்க்கும் கண்ணாடியில் 

ஏன் இத்தனை விரிசல்கள் 

உடைந்து தெரியும் 

உன் முக அழகும் 

பிரம்மிக்க வைக்கின்ற 

உலக அதிசயம் தான்.



!!!===((( ராஜ்கமல் )))===!!!