Search This Blog

27 November 2016

குரங்கினம் காப்போம்

குரங்கிலிருந்து தான் 
மனிதன் வந்தானென்பதை 
குரங்குகளின் காதில் விழும்படி சொல்லிவிடாதீர்கள் 
அவமானத்தில் குரங்கினமே 
தற்கொலை செய்து கொள்ளப்போகின்றது....



உயிர் துறப்பேன்

எனை உயிரோடு 
ஜீவசமாதியாக்கிக் கொள்ள
இடம் தருவாயா...?
உன் நெஞ்சிக்குழியை...



18 November 2016

கூந்தலிசம்-4

கொஞ்சம் நுகர்ந்ததற்கே  
போதையேறி மயங்கி விழுகின்றேன்
இது ஹேர் வாசமா....?
இல்லை
ஹெராயின் வாசமா...?



15 November 2016

முத்தப்பறவைகள்

அவள்..! 
முத்தங்களை பறவைகளாக்கி.
அனுப்புகின்றாள்...
நான்...! 
என் இதயத்தை
வேடந்தாங்களாக்கி 
காத்துக்கொண்டிருக்கின்றேன்...




12 November 2016

இடைவழிச்சாலை

என் பார்வைகள் எறும்பாகி 
பாதயாத்திரை செல்கின்றது
உன் இடைவழிச்சாலையில்...



08 November 2016

அழியாக்கோடுகள்

கடவுளென்பவன்...! ஏழைகளின் தலையெழுத்துகளில் மட்டுமே அழுத்தி வரைந்துவிடுகின்றான் வறுமைக் கோடுகளை...



07 November 2016

வெட்கத்தொகை....!

மக்கள் தொகையை விடவும்,
நாளுக்குநாள்
அதிகரித்துக் கொண்டே போகின்றது
உன் வெட்கத்தொகை....!





நழுவுதே...!

எனக்கு கிடைக்கின்ற 
ஒவ்வொரு வாய்ப்புகளும்
ஹாலிவுட் நடிகையின்
ஆடையைப் போல தான்
நழுவிப்போகின்றது...



02 November 2016

செல்லினம்

உன் விரல்களால் 
உன் Cell படும் அவதிகளை விட
உன் விழிகளால்
என் செல் படும் அவதிகளே
அளவற்றவை...