Search This Blog

27 February 2013

!!!==( காகிதம் சொல்லும் என் மனதை )==!!!





 



கடிதமொன்று எழுதுகிறேன்
காதலியே நீ வேண்டுமென்று
கண்களை திறந்து பாரடியே
காகிதம் சொல்லும் என் மனதை

வரிகள் பல எழுதிவைத்தேன்
வார்த்தைகளே ஏதுமில்லை-என்
வாழ்க்கையையே கவிதையாக்க
வா வா என் தேவதையே

கோபமான பார்வை பார்த்து
கொன்று என்னை புதைக்காதே
கொஞ்சிப் பேசும் வார்த்தைகளை
கொஞ்சம் பேசி பாரடியே

எந்தன் வீட்டு விளக்குகளும்
ஏங்கி தினமும் அழுகுமடி
நீ வந்து ஏற்றி வைத்தல்
நிற்காமல் சுடர் எரியுமடி

வகிட்டில் ஒரு பொட்டு வைக்க
வருசக் கணக்கா காத்திருக்கேன்
வசந்தம் தந்தவள் நீதானே-என்
வாழ்க்கை துணையாய் வந்துவிடு

கல்லறை நானும் செல்வதற்குள்
காதலை நீயும் சொல்லிவிடு
அலைகள் இல்லா கடல் போல
அமைதியாய் இருந்தே எனை கொல்லாதே


!!!===((( ராஜ்கமல் )))===!!!

!!!==( இந்த காதல் வந்துவிட்டால் )==!!!



                                                           


    
சைலன்டான என் உதடு
சத்தம் போட்டு சிரிக்குதடி!
வைப்றேட்டான உன் இதயம்
கட்டி என்ன இழுக்குதடி.

ப்ளுடூத் போல உன் விழிகள்
காதலை ட்ரான்ஸ்பர் செய்யுதடி!
மெமரி கார்டு போல் என்னிதயம்
காதலை ஏற்றுக் கொண்டதடி.

ஜென்றலான என் வாழ்க்கை
ஜிபிஆர்எஸ் சா இயங்குதடி!
WIFI போல தூர இருந்து
WIFEFAA  உன்ன நினைச்சேன்டி.

இதயம் பேசும் வார்த்தைகளெல்லாம்
EARPHONENINRI  கேட்குதடி!
உன்னை மட்டும் CAMERA விழிகள்
காதல் CAPTURE  செய்யுதடி.

CONTACT லிஸ்ட்டில் நீ மட்டும்
காதலியாக அமர்ந்தவளே
CALCULATE செய்து பார்க்கையிலே
என் வாழ்க்கைக்கு நீ தான் உகந்தவளே.

DUAL SIM போல உன் விழிகள்
என் இதயத்தில் INSERT ஆனதடி!
என்னை நீ வேண்டாமென்றால்
என் இதயம் SWITCH  OFF ஆகுமடி.


!!!===((( ராஜ்கமல் )))===!!!

!!!===((( சகியே நீ வேண்டுமடி )))===!!!



கண்மூடி கண் திறந்தாள்
கண்முன்னே வந்து நிற்ப்பாள்
கண்ணசந்து நானுறங்க
கனவிளவள் தொல்லை செய்வாள்

தொலைவிலுள்ள அவளிடம்
தொலைத்து விட்டேன் இதயத்தை
தொடர்வண்டியாய் நீளுதே
தொலையாத உன் நினைவுகள்

பட்டுடுத்தி நீ நடந்தால்
பாற்கடலும் மயங்கிவிடும்
பாவையிவள் சிரிக்கையிலே
பாவி மனம் சிக்கிவிடும்

உன்னை நான் நினைக்கையிலே
உடலெல்லாம் சிலிர்க்குதடி
உன்னுடன் நான் வாழ்ந்து
உனக்கு முன் இறப்பேனடி

மனசுக்குள்ளே நீயிருக்க
மற்றவளுக்கு இடமில்லையடி
மரணமில்லா நம் காதலுக்கு
மதிப்பெண் பல கோடியடி

சாயம் போகாத காதலுக்கு
சாவென்பதே இல்லையடி
சாகாமல் நான் வாழ
சகியே நீ வேண்டுமடி


!!!===((( ராஜ்கமல் )))===!!!

!!!===( மாற்றுத் திறனாளிகளுக்காக )===!!!



 


 உனக்குள் உள்ள திறமைகளை 
உலகம் அறிய வேண்டுமடா!
ஊனம் என்ற வார்த்தையினை
உடைத்தெறியும் நேரமடா.

குறைகளை காணும் மனிதரினம் 
கூனிக் குறுக வேண்டுமடா! 
குருதி கலந்த வியர்வைகளில் 
கடின உழைப்பு தோன்றுமடா. 

கட்டுத்தறிக் காளையை போல் 
கட்டுப்படாமல் ஓடிடடா!
கண்ணுக்குள்ளே முளைத்த கனவு 
கண்ணெதிரே வந்து சேருமடா.

உழைப்பு என்ற மந்திரம்
உனக்கு தெரிந்தால் போதுமடா! 
உருளும் உலகமும் எப்போதும் 
உழைப்பிடம் மட்டும் தோற்க்குமடா.

வீணாய் போகும் நேரங்களெல்லாம் 
வெற்றிக்கு தடையாய் இருக்குமடா!
வியர்வை சிந்த உழைத்தால் மட்டும் 
வெற்றிகள் உன்னை சேருமடா.


!!!===((( ராஜ்கமல் )))===!!!