Search This Blog

24 September 2015

முற்றுபெறா முத்தவியல்


காதலியே....!
என் இதழ் ரேகை தேய,
முத்தம் கொடு.....

உன் இதழும்,என் இதழும், ஒன்று சேர்ந்து 
எதையே விவாதித்துக் கொண்டிருக்கின்றது,
சப்தமில்லாமல்....!

எனை திட்டித்தீர்த்த,
உன் இதழ்களால்,
எண்ணற்ற முத்தங்களை, 
கொட்டித்தீர்த்துவிடு....!

தென்றலே....!
என்னவள் தரும், 
முத்த ஒலிகளை மட்டுமே,
என் செவியினுள் அனுப்பு,
மத்த இசைகளை விட,
என்னவள் தரும்,
முத்த இசைகளே,
எனக்கு பிடிக்கின்றது....!

என் இதழ் வர்த்தகத்தில்,
உன் முத்தங்களை, 
முதலீடு செய்.....

இமைகள் மூடி,
இதழ்கள் பேசும் மொழியினை
இதயம் மட்டுமே அறிகின்றது....!

காதலுக்கு மருந்தாகவும்,
காமத்திற்கு விருந்தாகவும்,
முத்தம் மட்டுமே முத்திரை பதிக்கின்றது....!

தமிழைப் போல், 
அழகாய் முத்தம் கொடு....!
ஆங்கிலத்தைப்  போல், 
ஆபாசமாய் முத்தம் கொடு....! 
கணிதத்தைப் போல், 
கணக்கிட்டு முத்தம் கொடு....! 
அறிவியலைப் போல், 
ஆய்வு செய்து முத்தம் கொடு....! 
சமூக அறிவியலைப் போல், 
வரலாற்று முத்தம் கொடு....! 

சப்தமற்ற முத்த மழை,
முற்றிலும் நனைந்தது.....
என்னவளின் தேகம்....!
மழை தூறும் மேகமாய் 
என் இதழ்கள் 

என்னவளின் 
கன்னக்குழியில் தேங்கி நிற்க்கும்
முத்த மழையில்
என் காதல் 
நீந்திக் கொண்டிருக்கின்றது...

உன்னோடு சண்டையிட்டுப்
பேசா தருணங்களில்
உனை சமாதானப்படுத்த 
நான் அனுப்பிய சமாதானப் புறாக்கள் தான்
பறக்கும் முத்தங்கள்...
பறந்து வந்த அந்த முத்தங்களை 
பத்திரமாய் பூட்டி வை
உன் இதயக் கூண்டிற்குள்...
என்னை சமாதானப்படுத்த 
உனக்கும் தேவைப்படலாம்...............!



08 September 2015

கருப்பு முத்தங்கள்


காதலியே....!
கள்ளத்தனமாய் நீ கொடுக்கும் முத்தங்களையெல்லாம்,
பத்திரமாய் பாதுகாக்கும்,
சுவிஸ் வங்கியாய்,
என் இதயம்.....!



04 September 2015

சில்மிஷியே.......


வெறும் சாதம்
ஏன் பிரசாதமானது
உன் எச்சில் பட்டதாலா....?
நீ புன்னகை சிந்திய
இடமெல்லாம் பூக்கள் பூக்கின்றதே
இதுதான் புன்னகை பூவோ....?
என் தரிசு இதயத்தில்
காதலை விதைத்துவிட்டு
என் நிம்மதியை
ஏனடி அறுவடை செய்கின்றாய்...?
எதிரியைக் கூட,
மன்னிக்கத் தெரிந்தவள் நீ.....!
உன் காதலனை,
ஏன் தண்டிக்கின்றாய்....?
நிலவின் முகத்தில் நட்சத்திரப் பருக்கள்..
கிள்ளிவிடாதே....!
ஏனெனில்...?
என் இதயத்தில்,
ரத்தக்கசிவு ஏற்படக்கூடும்......
உதிர்ந்து விழும்,
உன் ஒவ்வொரு கூந்தல் முடியும்,
என் புத்தக அறைக்குள் வரவேற்கப்படும்,
புது விருந்தாளிகள்....
உன் இதயச் சிறையில்,
கைதியாய் வாழும் எனக்கு,
விடுதலையும் வேண்டாம்....!
விடுமுறையும் வேண்டாம்....!
சீப்பின் பற்களில் சிக்கி,
உன் கூந்தல் காயமடைவதை,
ஒருபோதும் தாங்கிக்கொள்ளாது,,
என் நெஞ்சம்....!
உன் மேனியெங்கும்,
ஒட்டிக்கிடக்கும் மச்சங்களை எடுத்து,
என் கவிதைகளுக்கு முற்றுப்புள்ளியாகவும்,
தொடர்புள்ளியாகவும் பயன்படுதிக்கொள்ளவா....?
மலைச்சரிவுகளில் அவ்வப்போது ஏற்படும்,
மண் சரிவைப் போல்...
சட்டென சரிந்து விழுகின்றது,
உன் துப்பட்டா......
உன் புருவத்தின் மேலே,
நிம்மதியாய் உறங்கிக்கிக் கொண்டிருந்த,
எனது கனவுகள்....
நீ....!
புருவம் உயர்த்திப் பேசுகையில்,,,
தரையில் விழுந்து தரைமட்டமானது......