Search This Blog

30 May 2015

கவியே என் காதலி


என் கவிதைகள் தான்
எனது காதலி....
அவற்றோடு தான்
தினம், தினம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன் 
எனது காதலர் தினத்தை....





நவீன நாகரீகம்


 வீதிகளெல்லாம்
குளியலறை போலவே
காட்சியளிக்கின்றது
அரை,குறை ஆடைகளால்.....




எனது காதல் ஊமையானதே


என் காதலை,
உன்னிடம் சொல்லிட வரும்போதெல்லாம்,
முத்துகளற்ற கொலுசைப் போல்
ஊமையாகிப் போகின்றேன்.....



இருவேறு கோணங்கள்


பசியெடுக்கவில்லை என்பது
பணக்காரனின் பிரச்சனை...
பசியெடுப்பது தான்
ஏழையின் பிரச்சனை..



ஹைக்கூ


விழித்துக்கொண்டே
உறங்கும் வியாதி
கடவுளுக்கும்






28 May 2015

அழகிய ஆயுதம்


என் இதயத்தை, 
குத்திக் கிழிக்கவா
கூர் தீட்டி  வந்தாய் 
உனது புருவங்களை....!



25 May 2015

இவையிரண்டும் போதுமடி


உன்னிடம் நான் எதிர்பார்ப்பது....
இரண்டே இரண்டு தான்...
நான் கேட்பதை,,,
நீ மறுக்காமல் கொடுத்துவிடு.....
நான் கேட்காததை,,,.
நீ மறக்காமல் கொடுத்துவிடு...



காவியணிந்த பாவிகள்


பெண்ணே.....!
சாமியார்களிடம் தள்ளியே இரு,
இல்லாவிட்டால்,
பிள்ளைவரம் கொடுத்திடுவார்..........



இதுதான் காதலா...?


எவனையோ.....
ஏமாற்றிய இவளும்,
எவளையோ.....
ஏமாற்றிய இவனும்,
இன்று உலகத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்,
காதலர்களென்று......!



காதலின் உச்சம்


காதலியே.....!
என்னை எவ்வளவு வேண்டுமானாலும் அழுக்காக்கு,,,
நான் குளித்துக் கொள்கின்றேன்.....
நீ........!
என்னால் எவ்வளவு வேண்டுமானாலும் அழுக்காகு....
நான் குளிப்பாட்டிவிடுகின்றேன்......
இது காமத்தின் மிச்சமல்ல,
காதலின் உச்சம்.....


23 May 2015

காதலின் அவஸ்தை எதிரிக்கும் வேண்டாம்




அவள்.....!
கைமீறிப் போயிருந்தால்
காத்துக்கொண்டிருப்பேன்....
கைமாறிப்போனதால் தான்
கண்ணீர் வடிக்கின்றேன்....

ஆச்சர்ய குறியாய் இருந்த என் காதல்,
அவள் வகிட்டில் எவனோ வைத்த முற்றுப்புள்ளியால்,
என் வாழ்க்கை கேள்விக்குறியானது.....
இருந்தும் தொடர் புள்ளியாய் பயணித்துக் கொண்டிருக்கின்றேன்.....
அடுத்த ஜென்மத்திலாவது அவளை மணந்துவிட வேண்டுமென்று......

அடுத்த ஜென்மம் என்பது நம்பப்படாமல் இருக்கலாம்
ஆனால்,காதலனை பிரிந்த ஒவ்வொரு காதலியும்,
காதலியை பிரிந்த ஒவ்வொரு காதலனும்,
காத்துக் கொண்டிருப்பது,,,,,,,
அடுத்த ஜென்மத்திற்காகத்தான்....

மரணமே,
என் முகவரி உன்னிடமிருந்தும்
நீ வருவதற்கு ஏன் இந்த தாமதம்...

கடவுளே...!
தயவு செய்து காதலில் தோற்றவர்களை
கருணைக் கொலை செய்து விடு
இல்லாவிட்டால்,
அவர்கள் தற்கொலை செய்து கொள்வார்கள்.....!



கண்ணீர் மட்டும் என் துணையாகுமே



 காதலியே...!
உன்னை பிரியும் நேரம் நெருங்கிவிட்டது
ஆதலால், என் இதயம் நொறுங்கிவிட்டது....

வலியுடன் வழியறியாமல்
விழி பிதுங்கி நிற்கின்றேன்.......!
ஒளிமயமான என் வெளிச்சங்கள்
இரவாகிப் போனதனால்......!

மதி கெட்டவர்கள் செய்த சதியினால்
விதியென்று வீதியில் நிற்கின்றோம்...
பிரிவதற்கென்றே பிறந்த காதலர்கள் நாமல்லவா.....!

நான் எதிர்பார்த்து இதுவரை எனக்கு கிடைக்காதது, 
நீயும்,,,, மரணமும்...
இரண்டில் ஒன்றேனும் விரைவில் வேண்டும்...

ஐம்பூதங்களில் ஒன்றேனும் கோபம் கொண்டு
இந்த உலகத்தை அழிக்காதா...?
கல்லாய் நிற்கும் கடவுள்
என் கதை கேட்டு கண் விழிக்காதா...?

ரணமானது ராமனின் வாழ்க்கை...
சிதைந்து போனது சீதையின் வாழ்க்கை....
ராவணனுக்கு மட்டுமே இங்கு ராஜவாழ்க்கை......!



பெண்கள் நாட்டின் கண்கள்



பெண்கள் நாட்டின் கண்கள்
என்று சொல்லிவிட்டு....
அவர்களை குருடாக்குவதிலேயே
குறியாய் இருக்கின்றது,
இந்த சமூகம்.....



என் சகோதரி புலமிக்கு அர்ப்பணம்


 எனக்கு கிடைத்த,
இரண்டாம் தாயவள்....!
கண்ணியத்தில் அவள்,
கண்ணகியை விட தூயவள்.....!

கவிதை எழுதிட வந்த எனக்கு
கடவுளே! தந்த பொக்கிஷம் அவள்.....!
என் முதல் மழையில் அவள் நனைந்ததற்காய்
நான் ஆனந்தப்படுகின்றேன்.....!

அவள்....
பயமறியா ஆண்...!
பாசம் மிகுந்த பெண்....!
தட்டிக்கொடுக்கும் தந்தை.....!
தாலாட்டு பாடும் தாய்.....!

நான் தவறு செய்தால் திட்டு
அடங்கவில்லையென்றால் அடி
என் சகோதரியல்லவா நீ........

என் உடன்பிறவாதவள்
ஆனால்,
என் உடன்பிறந்தவளாய் இருப்பவள்....
ஆகவே,
அவள் என் உடன்பிறந்தவள்....

அக்காக்கள் இல்லாத....
தம்பிகளுக்கு மட்டும் தான் தெரியும்......
அக்கா என்பவள்,
அன்னைக்கு நிகரானவள் என்று.....



அவளொரு தொடர்கதை



 சமையலறையில் கருகிப்போகிறாள்..
படுக்கையறையில் வியர்த்துப்போகிறாள்…
கம்பிகளற்ற சிறைச்சாலையில்,
சீருடை அணியா ஆயுள் கைதியவள்…

சுவர்களுக்கும் செவியிருந்தால்,
அவள் அழுகுரல் கேட்டு விழித்திருக்கும்
சுவர்களும் கற்றுக்கொண்டதோ…!
ஆணாதிக்கத்தை…..

இந்தச்சுவர்.
அவள் வாய்விட்டு அழும் போது கூட
காதடைத்து தான் இருந்தது
இந்த ஆண்களைப் போலவே....

அதிகமாய்ப் பேசாமலும்
அளவாய்ப் பேசாமலும்
அவளுக்குள்ளேயே பேசிக்கொள்கிறாள்
அவள் கதைகளை.....!

அவள் கனவுகளெல்லாம் அடுப்பங்கரையில்
தொடங்குவதாளென்னவோ ...
அங்கேயே,அதுவும் எரிந்து சாம்பலாகிவிடுகின்றது.....!

தேவைக்கு மட்டுமே தேவைப்படுவதால்
தேவையற்ற நேரங்களில்
அவள் தேவையற்றுப் போகிறாள்
இந்த இதயமற்ற ஆண்களுக்கு….....

அவள் வலிகளை சொல்லப்போனால்
மொழிகளில் பற்றாக்குறை...
ஒன்றா,இரண்டா மொழிகளும்.வலிகளும்

பண்டிகைக் காலமாயினும்,
கோடைக் காலமாயினும்
விடுமுறையில்லா வேலைக்காரியாகிறாள்,,,,
உறக்கத்திலும் உளறிக்கொண்டிருக்கின்றாள்,,,,
நாளைய சமையல் குறிப்புகளை...

அவள் வீட்டில் இல்லையென்றால்
வீடே குப்பைத் தொட்டியாகும்....
அவள் நாட்டில் இல்லையென்றால்
நாடே சவப்பெட்டியாகும்.....

இவள் நாக்கு,
பேசுகிறதோ தவிர
நீதி கேட்கவில்லை
வீட்டுக்கு அடங்கிப்போவதாய் நினைத்து
வாழ்நாள் வரை முடங்கிப்போகிறாள்
இவளுக்கு ஓய்வென்பது
இவளின் இதயம் ஓய்வெடுக்கும்போது மட்டும் தான்



பலப்பரீட்சை


 

மதிப்பெண்ணிலும் பெண் இருப்பதாலென்னவோ...
அதுவும் பெண்களுக்கே சொந்தமாகிவிட்டது....



தத்துவம்



 கடவுள்களுக்கு,
கோவில் கட்டுவதை நிறுத்திவிட்டு,
உங்கள் மூடநம்பிக்கைகளுக்கு,
சமாதி கட்டுங்கள்.....



ஹைக்கூ



 குடைச்சலான சோலி
குறைச்சலான கூலி
பாவம் பட்டதாரிகள்




வசூல்ராஜா MBBS


கழுத்தில் கத்தியை வைத்து, 
கொள்ளையடிப்பவர்களை  விட 
உடம்பில் கத்தியை வைத்து, 
கொள்ளையடிப்பவர்களே அதிகம்....  
ராஜா வசூல்ராஜா MBBS.........