காதலில் தோற்றால் வருத்தம்,
அவ்வலியே உன்னைத் திருத்தும்.
நெஞ்சினில் காதல் உறுத்தும்-பின்
வாழ்வைப் பற்றி உணர்த்தும்.
பணம் தான் அவளின் தேவை,
என் காதில் வைத்தாள் பூவை,
பெண்ணே உன்னை மறப்பேன்.
மீண்டும் புதியதாய் பிறப்பேன்.
காதல் என்பது கணக்கு-அதில்
தேர்ச்சியே இல்லை எனக்கு.
வெறும் வெட்டிக் கதைகள் எதற்கு,
இனி உன்னை நீயே செதுக்கு.
No comments:
Post a Comment