Search This Blog

29 September 2016

செவியீர்ப்பு விசை

உன் ஹார்மோனியம் 
வாசித்தலில்  தான்
எங்கள் ஹார்மோன்கள்
உயிர்த்தெழுகின்றன...

இறகின்றி காது குடையும் சுகத்தினை
இசையூடே தந்தவன் நீ...

சில நேரம் இசைகளால்
வலிகளை வருடிவிடுகின்றாய்...!
பல நேரம் இசைகளால்
மனதை திருடிவிடுகின்றாய்...!

இசை தயாரிக்க சொன்னால்,
பசை தயாரித்து எங்கள் இதயத்தில்
பூசிவிடுகின்றாய்....
அதில் நாங்கள் இறுக்கமாகவும்
நெருக்கமாகவும் ஒட்டிக்கிடக்கின்றோம்...

பலர் இசையென்ற பெயரில்,
ஒலியெழுப்புகிறார்கள்
இல்லையில்லை வலியனுப்புகிறார்கள்....

இரைச்சல்களால் காயமடைந்த
எங்கள் செவிகளுக்கு,
இசைஞானியே கொஞ்சம்
இசை தடவு......



22 September 2016

ஜன்னலோரம்

ஜாக்கெட்டுக்கு 
ஜன்னல் வைத்துவிட்டு
கூந்தலை,
திரையாக்கிக் கொள்கிறாய்....



08 September 2016

கூந்தலிசம்-3

உன் கூந்தலேறும் பூக்கள் 
முதிர்ச்சியடைவதில்லை 
முக்தியடைகின்றன...



01 September 2016

கூந்தலிசம்-2

உன் கூந்தல் தேசத்திலிருந்து 
தவறி விழுந்த பூக்களெல்லாம்  
அகதியாகின்றன...