Search This Blog

24 November 2015

ஹைக்கூ


நிலவின் மார்பினில்
வானவில் உறங்குகின்றது
துப்பட்டா....



08 October 2015

லவ் அட்லேண்டிக்



இது காதலர்களுக்கென்றே
படைக்கப்பட்ட புது உலகம்...!
இதயமற்ற யாருக்கும்,
இங்கே இடம் கிடையாது......

இங்கே இயந்திரங்கள் கிடையாது
இதயங்கள் மட்டுமே....!
காதலையும், காதலர்களையும் தவிர,
இங்கே யாருக்கும் அனுமதியில்லை.....

இங்கே மரங்களின் மீது  கூட,
மலர்களின் வாசம் வீசுகின்றது.....
அவைகளெல்லாமே,
காதலர்களின் மூச்சுக் காற்றல்லவா.....

வீதியெங்கும் நூலகங்கள்,
காதலைப்  பற்றிய புத்தகங்கள் மட்டுமே......
படிக்கப் படிக்கப் பிடிக்கின்றது,,,,
காதலையும் காதலர்களையும்.........

எங்கு பார்த்தாலும் ரோஜாச் செடி
காதலர்கள்  வசிக்கும் உலகல்லவா
ரோஜாக்கள்  இல்லாமலா....?

காதலர்களுக்காகவே பிறப்பதில்,
பெருமிதம் கொள்கின்றன...
ரோஜாப் பூக்கள்...

இது காதலர் உலகம்,
இங்கு கிமு கிபி - கள் கிடையாது........
காமு காபி - கள்  தான்,,,
காதலுக்கு முன், காதலுக்கு பின்......!

வீதியெங்கும் பூங்காக்கள்,
அத்துமீறா காதலர்கள்......
ஆச்சரியம் தான்,
ஏனெனில்,,,
இது காதலர்கள் வசிக்கும் உலகல்லவா........

இங்கே சவப்பெட்டிகள் கூட,,,
சந்தன மரத்தில் தான்,
செய்யப்பட வேண்டும்.....
ஏனெனில்,
காதலர்கள் இறந்த பின்பும்,
மதிக்கப்பட வேண்டியவர்கள்......!

இயற்கையையும் காதலையும்,
எத்தனைமுறை வர்ணித்தாலும்.
கவிதைகள் தீர்வதே  இல்லை..........!

காதலர்களுக்கு,
காற்றை விட,
கவிதைகள் தான் அதிகம் தேவைப்படுகின்றது,,,
(சு)வாசிக்க ....!



24 September 2015

முற்றுபெறா முத்தவியல்


காதலியே....!
என் இதழ் ரேகை தேய,
முத்தம் கொடு.....

உன் இதழும்,என் இதழும், ஒன்று சேர்ந்து 
எதையே விவாதித்துக் கொண்டிருக்கின்றது,
சப்தமில்லாமல்....!

எனை திட்டித்தீர்த்த,
உன் இதழ்களால்,
எண்ணற்ற முத்தங்களை, 
கொட்டித்தீர்த்துவிடு....!

தென்றலே....!
என்னவள் தரும், 
முத்த ஒலிகளை மட்டுமே,
என் செவியினுள் அனுப்பு,
மத்த இசைகளை விட,
என்னவள் தரும்,
முத்த இசைகளே,
எனக்கு பிடிக்கின்றது....!

என் இதழ் வர்த்தகத்தில்,
உன் முத்தங்களை, 
முதலீடு செய்.....

இமைகள் மூடி,
இதழ்கள் பேசும் மொழியினை
இதயம் மட்டுமே அறிகின்றது....!

காதலுக்கு மருந்தாகவும்,
காமத்திற்கு விருந்தாகவும்,
முத்தம் மட்டுமே முத்திரை பதிக்கின்றது....!

தமிழைப் போல், 
அழகாய் முத்தம் கொடு....!
ஆங்கிலத்தைப்  போல், 
ஆபாசமாய் முத்தம் கொடு....! 
கணிதத்தைப் போல், 
கணக்கிட்டு முத்தம் கொடு....! 
அறிவியலைப் போல், 
ஆய்வு செய்து முத்தம் கொடு....! 
சமூக அறிவியலைப் போல், 
வரலாற்று முத்தம் கொடு....! 

சப்தமற்ற முத்த மழை,
முற்றிலும் நனைந்தது.....
என்னவளின் தேகம்....!
மழை தூறும் மேகமாய் 
என் இதழ்கள் 

என்னவளின் 
கன்னக்குழியில் தேங்கி நிற்க்கும்
முத்த மழையில்
என் காதல் 
நீந்திக் கொண்டிருக்கின்றது...

உன்னோடு சண்டையிட்டுப்
பேசா தருணங்களில்
உனை சமாதானப்படுத்த 
நான் அனுப்பிய சமாதானப் புறாக்கள் தான்
பறக்கும் முத்தங்கள்...
பறந்து வந்த அந்த முத்தங்களை 
பத்திரமாய் பூட்டி வை
உன் இதயக் கூண்டிற்குள்...
என்னை சமாதானப்படுத்த 
உனக்கும் தேவைப்படலாம்...............!



08 September 2015

கருப்பு முத்தங்கள்


காதலியே....!
கள்ளத்தனமாய் நீ கொடுக்கும் முத்தங்களையெல்லாம்,
பத்திரமாய் பாதுகாக்கும்,
சுவிஸ் வங்கியாய்,
என் இதயம்.....!



04 September 2015

சில்மிஷியே.......


வெறும் சாதம்
ஏன் பிரசாதமானது
உன் எச்சில் பட்டதாலா....?
நீ புன்னகை சிந்திய
இடமெல்லாம் பூக்கள் பூக்கின்றதே
இதுதான் புன்னகை பூவோ....?
என் தரிசு இதயத்தில்
காதலை விதைத்துவிட்டு
என் நிம்மதியை
ஏனடி அறுவடை செய்கின்றாய்...?
எதிரியைக் கூட,
மன்னிக்கத் தெரிந்தவள் நீ.....!
உன் காதலனை,
ஏன் தண்டிக்கின்றாய்....?
நிலவின் முகத்தில் நட்சத்திரப் பருக்கள்..
கிள்ளிவிடாதே....!
ஏனெனில்...?
என் இதயத்தில்,
ரத்தக்கசிவு ஏற்படக்கூடும்......
உதிர்ந்து விழும்,
உன் ஒவ்வொரு கூந்தல் முடியும்,
என் புத்தக அறைக்குள் வரவேற்கப்படும்,
புது விருந்தாளிகள்....
உன் இதயச் சிறையில்,
கைதியாய் வாழும் எனக்கு,
விடுதலையும் வேண்டாம்....!
விடுமுறையும் வேண்டாம்....!
சீப்பின் பற்களில் சிக்கி,
உன் கூந்தல் காயமடைவதை,
ஒருபோதும் தாங்கிக்கொள்ளாது,,
என் நெஞ்சம்....!
உன் மேனியெங்கும்,
ஒட்டிக்கிடக்கும் மச்சங்களை எடுத்து,
என் கவிதைகளுக்கு முற்றுப்புள்ளியாகவும்,
தொடர்புள்ளியாகவும் பயன்படுதிக்கொள்ளவா....?
மலைச்சரிவுகளில் அவ்வப்போது ஏற்படும்,
மண் சரிவைப் போல்...
சட்டென சரிந்து விழுகின்றது,
உன் துப்பட்டா......
உன் புருவத்தின் மேலே,
நிம்மதியாய் உறங்கிக்கிக் கொண்டிருந்த,
எனது கனவுகள்....
நீ....!
புருவம் உயர்த்திப் பேசுகையில்,,,
தரையில் விழுந்து தரைமட்டமானது......
 

08 August 2015

மனிதக் குரங்குகள்



 உண்மையை என்றும் பேசாதே..
விபத்தினை கண்டால் குருடாகு... 
அறிவுரை சொன்னால் செவிடாகு...



28 July 2015

பொறியியலில் வென்ற அறிவியல்


உன் ஆக்சிஜன் பிரிந்ததால்,
உலக மக்களின் விழிகளில் அமில மழை....
உன் புத்தியீர்ப்பு விசையிடம்,
புவியீர்ப்பு விசையும் தோற்றுவிடும்.....

ஒரு ஏழையின் மூளை,
ஏவுகணையாகி விண்ணைத் தொட்டது.....
நீ அனுப்பிய அறிவியல் பறவைகளெல்லாம்,
அக்னிச் சிறகுகளை விரித்து,
வானில் சிறகடித்துக் கொண்டிருக்கின்றது....

ஆய்வுக் கூடங்களே உன் படுக்கையறை,
அறிவியலே உன் ஆசை மனைவி,
அவளை தலை முதல் கால் வரை,
ஆராய்ச்சி செய்த விஞ்ஞானி நீ....
உன் முதலிரவு  மட்டுமல்ல,
முழு இரவும் இவளோடு தான்....

அறிவியலில் எத்தனையோ,
மூலக்கூறுகள் இருக்கலாம் - ஆனால்
அறிவியலின் மூலக்கூறு நீ....

கோவிலின் கருவறையை விட புனிதமானது,
உனது அறிவுரைகள்.....
உனது எழுச்சித் தீபங்களால்,
இருள்களெல்லாம் மூழ்கிப்போனது....
 
இயந்திரக்கோளாறை சரி செய்யும் உனக்கு
இதயக்கோளறு.....
நீ ஆங்கிலேயனையும் ஆட்டிப்படைத்த
தமிழ் வரலாறு......

இயற்பியல் முடித்த பொறியியல் நீ.....!
பொறியியலில் வென்ற அறிவியல் நீ.....!
தாவரவியலை வளர்க்கச் சொன்ன புவியியல் நீ.....!
வேதியியலைக் கொண்டு உயிரியலை அழிக்காதவர்  நீ......



26 July 2015

ஹைக்கூ



வெட்கத்தின்
முதல் முடுச்சை அவிழ்க்கின்றது
முத்தம்......



23 July 2015

ஆடிப் பிரிவு



ஒற்றை ஜடையாய்
பின்னிப் பிணைந்திருந்த
புதுமணத் தம்பதிகள்
ரெட்டை ஜடையாய்
பிரிக்கப்பட்டனர்....
ஆடி மாசம்.....



ஆடித்தள்ளுபடி




காதலியே...!
ஆடித்தள்ளுபடியெல்லாம் எனக்கு தேவையில்லை
உன் ஆடைகளை,நீ தள்ளுபடி செய்தாலே போதும்...



நவீன தொழிற்சாலை



பொய்களை உற்பத்தி செய்யும்
நவீன தொழிற்சாலை
வாய்.....
32 வெள்ளையர்களை கொத்தடிமையாக்கி
முதலாளித்துவம் செய்கின்றது
நாக்கு.........



18 July 2015

கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலி

2-ஆம் ஆண்டு நினைவஞ்சலி


குமரியிலே வள்ளுவனும் 
குமுறிக்குமுறி அழுகின்றான், 
தரணியிலே தமிழ்ப்புலவன் 
தவறிய சேதி கேட்டு.






நெருப்பில்லாமல் புகையாது ---- வித்தியாசமான முயற்சி


சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!

காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்

ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான்  உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!

நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....
 
 
நீ பேசும் பேச்சில், 
நான் சாதமாய் குழைகின்றேன்....
நெய்யாய் உருகி உருகி,
உனை காதலிக்கின்றேன்.....!

என் அப்பள இதயத்தை,
நொறுக்கி விடாதே.....!
என் கண்கள் அவ்வப்போது
கண்ணீரை வடிகட்டுகின்றது

கடுகு தாளிப்பது போல்
ஏன் என்னை தாளித்தெடுக்கின்றாய்....? 
இடியாப்பத்தை விட சிக்கலானது
என் வாழ்க்கை....!

என் மனம் தேங்காய் துருவலை போல்
மென்மையானது....!
என் காதல் ஆப்பாயில் போல்
ஒரு தலையானது....!

மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்
வார்த்தைகள் சிக்கித் தவிக்கின்றன
உனை காணும்போதெல்லாம்

காரசாரமாய் நீ பேசும்போதெல்லாம்
வெங்காயம் அரியாமலேயே
கண்ணீர் விடுகின்றேன்

நானென்ன கசாயமா
பிறகேன் எனைப் பார்த்தாலே
நீ முகம் சுளிக்கின்றாய்

பாலில் கலந்த தண்ணீரைப் போல் தான்
என்னுள் இருக்கும் நீ,,, 
என்னிடமிருந்து உனைப் பிரிப்பது
அவ்வளவு சுலபமல்ல.....

கருவேப்பிலையாய் என் இதயத்தை
நீ உருவி எடுத்துக்கொண்டதால் தான்
நான் கொத்தமல்லியாய்  வதங்கிக்கிடக்கின்றேன்....

பெருங்காயமில்லா உணவில்
சுவையில்லை....!
பெரும்காயமில்லா மனதில்
சுகமில்லை....!

எளிதில் கெடாத புளியோதரையாய்
என் கற்பு மட்டும்
அதை உனக்கு மட்டுமே பரிமாற விரும்புகின்றேன்....!



குறிப்பு : படிப்பறிவில்லா ஒரு சமையல்காரி தன் காதலனுக்கு அவளுக்கு தெரிந்த வார்த்தையை கொண்டு ஒரு கவிதை எழுதுகின்றாள்......



16 July 2015

காதல் தத்துவம்


ஆண்களின் காதல் Fact...
பெண்களின் காதல் Act...





என் தலையெழுத்தும் மறைந்து போனதே



எல்லோருமே எனை தட்டிக்கொடுத்து
வேலை வாங்கிக் கொள்கின்றார்கள்
நானோ..!
அவர்களுக்காக உழைத்து உழைத்தே
தேய்ந்து போகின்றேன்....

உங்களிடம் அடி வாங்கி வாங்கி
எனக்கும் மறித்துப்போனது
என் தலையெழுத்தும் மறைந்து போனது....

எனை படைத்தவர்கள் விற்றுவிட்டதால் தான்
இந்த படித்தவர்கள் எனை பாடாய் படுத்துகின்றார்கள்
ஹிட்லரைப் போல...

எனை அடித்து துன்புறுத்த
பயிற்சி வகுப்புகள் கூட நடத்துகின்றார்கள்
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு
சான்றிதழ்கள் வேறு....

எனது ஆயுட்காலம்
அவரவர் எனை கையாள்வதை பொறுத்தே
தீர்மானிக்கப்படுகின்றது....

பெண்ணே...!
நானென்ன உன் கணவனா..?
பிறகு ஏன்...?
எனை அடித்தே துன்புறுத்துகின்றாய்..
உன் குழந்தையை போல் நினைத்து
எனை இதமாய் வருடு....

ஆணே...!
நானென்ன உன் மனைவியா...?
பிறகு ஏன்
எனை அடித்தே காயப்படுத்துகின்றாய்
எனை உன் காதலியாய் நினைத்து
உன் விரல்களால் முத்தமிடு...

என் தாயுடனான உறவு நீடிக்கின்றது
இன்னம் வெட்டப்படாத
எனது தொப்புள்கொடியால்
USB CABLE....




04 July 2015

ஹைக்கூ


கண்மூடும் வரை, 
உனை காதலிப்பேன் 
கண்மூடித்தனமாய்....



விடைபெறா வினாக்கள்...


உன் விடைக்காக காத்திருக்கும்
வினா நான்....!
என் வினாக்கான விடை 
உன்னிடம் இல்லையெனில் 
உன் விடைக்கான வினாவாய் 
நானிருப்பேன்.....!
விடைபெறா வினாக்கள்.....



21 June 2015

துளிப்பா


சரியான இடம் கிடைக்கவில்லை 
தவறு செய்வதற்கு 
காதலர்கள்....



20 June 2015

கவியென நினைத்து கிறுக்கியவை- 1


இறைவன்  கொடுத்த,
 இலவசப் புடவையில்,
 சாயம்  போகின்றதாம்..
வருத்தத்தில், வண்ணத்துப் பூச்சிகள்....!



19 June 2015

இரங்கல் கடிதம்



பெண்ணை...!
வார்த்தைகள் உன்னிடத்தில்
உள்ளிருப்பு போராட்டம் செய்வதால் தான்
இந்த உலகை விட்டு,
என்னுயிர் வெளிநடப்பு செய்கின்றது....
உன் மனவளையத்தில்
அகப்பட நினைத்த எனக்கு
கடைசியில் கிடைப்பதென்னவோ...!
மலர்வளையங்கள் மட்டுமே...
நீ சூடிய அந்த ஒற்றைப் பூவையாவது
எனது இறுதி ஊர்வலத்தில்  தூவி விடு
என் ஆத்மா சாந்தியடையட்டும்........
இது இரங்கல் கடிதம் மட்டுமல்ல,
எனது இறுதிக் கடிதமும் கூட.......



17 June 2015

அழகென்றால் இதுதானா...?


வண்ணம் பூசிய
காகித மலர்களெல்லாம்
சாயம் போகின்றது,
மழையின் நனைகையில்....

குடையுடன் நீ வலம் வருவது
நனைந்துவிடக்கூடாது என்பதற்க்காகவா....?
சாயம் கறைந்துவிடக்கூடாது என்பதற்க்காகவா....?

விழாக்காலங்களில் வீடுகளுக்கு,
வெள்ளையடிக்கின்றார்களோ இல்லையோ, 
அவரவர் முகங்களுக்கு வெள்ளையடித்துக் கொள்கின்றார்கள்....!

பருவம் கடந்த பின்னும்
புருவ அலங்காரம்
கிழவிகளுக்கு.....

அழகு நிலையங்களெல்லாம்
அழகாய் இருக்கின்றது
அழகற்றவர்களை அழகுபடுத்திய
வருமானத்தால்....

தரை தொடும் நீளத்தில்
கூந்தல் வளர்த்தார்கள்
அன்று,
இன்றோ...!
கூந்தலின் நீளம் இடையை தொடுவதே
இமாலய சாதனையாகிவிட்டது.....!

கரப்பான் பூச்சிகளையும்
வண்ணத்துப் பூச்சிகளாக்கியது
அழகு நிலையம்....!

அன்புக்கு முக்கியத்துவம் கொடுத்த பெண்களெல்லாம்
இன்று அழகுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால்
இப்போது பிறக்கும் குழந்தைகள்,
தாய்ப்பாலின் வாசத்தை கூட,
உணர்ந்திருக்கமாட்டார்கள்......
ஆகவே தான்,
குழந்தைகளெல்லாம் நோயாளியாகிவிட்டார்கள்.....




12 June 2015

புதுயுகம் தேடும் பெண்ணே


புதுயுகம் தேடும் பெண்ணே
நீ புதர்களில் விழவேண்டாம்...!
ஏன் பெண்ணாய் பிறந்தோமென்று
நீ கவலைப்பட வேண்டாம்...!

கடவுள் கொடுத்த பாக்கியம்
பெண்ணே கருவறை தானடி...!
கருவை சுமக்கும் பெண்ணே
நீ கடவுள் தானடி...!

விழிகளில் வழிந்திடும் கண்ணீர்
வலிகளின் அடையாளம்...!
முயற்சிகளில்லா வாழ்க்கை
முற்றிலும் அவமானம்...!

வளையல் அணியும் கைகள்
வானை எட்டிப் பிடிக்கிறதே...!
கொலுசை அணியும் கால்கள்
விண்ணில் நடக்க துடிக்கிறதே...!

பட்டம் பெற்ற பெண்ணே
சிறு வட்டம் அல்ல உலகம்...!
சோம்பலை தூக்கி எறிந்தால்
உன் சோதனை காலம் விலகும்...!

அடுப்படி மட்டும் உலகல்ல,
அகிலமும் உந்தன் பெயர் சொல்ல,
எதிர்வரும் தடையை எதிர்கொள்ள,
எழுந்து வா நீ வெல்ல...



11 June 2015

ப்ரியமான தோழி


என் கவியால் வந்த ஒரு சொந்தம், 
உன்  பெயரோ அழகான சந்தம்...! 
உன் அன்பு நீர்வீழ்ச்சி தானே-அதில் 
தினமும் நனைகிறேன் நானே...!  

நாணம் என்பதே இன்று 
அழிந்து போனதே என்று 
நாளும் கூறினேன் நானே-இன்று 
நானும் மாறினேன் தானே...! 

அன்பு வலையை நீ வீச-அதில்  
நான் மாட்டிக் கொண்டேனடி...! 
பெற்றத் தாயை போல பெரும் அன்பை  
நான்  உன்னில் கண்டேனடி...!  

உனைக் காணவில்லை நான் நேரில் 
உனைப் போல யாருமில்லை பாரில்...!  
பல பெண்ணில் இல்லையடி உண்மை 
நான் உன்னில் காண்கிறேன் பெண்மை...!  

உன் கனவு நிறைவேறவேண்டும்
உன் கவலை கரைந்தோடவேண்டும்...!  
பெரும் இலக்கை நீ தூக்கிச்  செல்லு-என்றும்  
துணிவின் துணையோடு வெல்லு.....



குறிப்பு : இக்கவி இலங்கையை சேர்ந்த என் தோழிக்கென எழுதியது...

10 June 2015

உடலே எந்தன் முதலீடு


சாலையோரம் நிற்க்கின்றேன்..
என்னுடலை நானே விற்க்கின்றேன்.
வறுமையும் என்னை வாட்டியது-பின்
இளமை இவ்வழி காட்டியது.........

கலவியின் மீதொரு,
ஏக்கம் வரும்,
என் கட்டுடல் அதனை
மீட்டு தரும்........

உடலே எந்தன் முதலீடு-இதில்
கட்டணம் கட்டி விளையாடு......
கற்பை காப்பது பெரும்பாடு..
உடலை விற்றேன் வெறுப்போடு...

காலப்போக்கில் உடையும் நடையும்
மாறிப் போனதடா.......
விலைமகள் என்ற பட்டத்தால்
விதி நாறிப் போனதடா.......

கடவுளின் மீது சத்தியமாய்
நான் பத்தினி பிள்ளையடா....
காலம் செய்த கோலத்தால்
நான் பத்தினியில்லையடா....

நிம்மதியென்பது என் வாழ்வில்
வெறும் கனவாய்ப்  போனதடா.....
பாடாய்ப் படுத்தும் பாவிகளால்
உடல் ரணமாய் ஆனதடா....

மங்கையின் மீது போர் தொடுத்தால்
கட்டுடல் தாங்காது...
பலர்  வேகத்தால் வரும் சோகத்தால்
என்  இரவுகள் தூங்காது....

என் தன்மானம்,
இங்கு அவமானம்..
என் நிர்வாணம்,
தரும் வருமானம்.........



09 June 2015

வியர்வைத் துளி


உழைப்பினில் கவனம் செலுத்து- உன்
உயர்வுகள் வரும் அதை பொருத்து…!
உன் பிழைகளை நீயே திருத்து
வரும் தடைகளை ஓடத் துரத்து…!

உடம்பினில் வெளிவரும் வியர்வை-அது
துடைத்திடும் உந்தன் துயரை…!
வாழ்க்கை என்பது மகத்துவம்- அதில்
வியர்வைக்கு உண்டு தனித்துவம்….!

பதவியின் மீதொரு ஏக்கம்
பணமே தான் நம் நோக்கம்…!
இளமையில் வறுமை கொடுமை
முதுமையில் கொடுமை தனிமை…!

அடி மேல் அடி வை துணிவாய்
உயர்ந்தும்  நீயிரு பணிவாய்…!
வியர்வையை சிந்து ஏராளமாய்
வெற்றிகள் குவியும் தாராளமாய்…



கற்பி


இளமையில் கல்லெனச் சொன்னார்கள்
கற்றவர் கல்லாய் நின்றா ர்கள்...!
இளமையைப் பலர் வீண் செய்தார்கள்
இருந்தும் தொலைந்தே போனார்கள்...!

கல்வியைப் பற்றி முன்னோர்கள்
கல்வெட்டில் கூடச் சொன்னார்கள்...!
கற்கையில் கல்வி கசந்திடுமே
கற்ற பின் வாழ்க்கை இனித்திடுமே...!

இளங்கலை விளங்கலை என்று
இளமையை வீணடித்தால்,
முதுமையில் இளங்கலை கற்கும்
நிலையினில் நீயலைவாய்...!

எதற்கும் வேண்டும் பட்டம்,
இதுதான் இன்றைய சட்டம்...!
கற்றதைப் பிறருக்குக் கற்றுக்கொடு
கல்விக்குப் பெருமைப் பெற்றுக்கொடு...




06 June 2015

அறிவியல்


கண்டுபிடிக்க, 
வாயில்லா ஜீவனை அழிக்கின்றது
கண்டிபிடித்து, 
வாயுள்ள ஜீவனை அழிக்கின்றது...
அறிவியல்.......



வாலி(பனு)க்கு வாழ்த்து மடல்


இளமைக்கு ஏற்றார் போல் வரியிருக்கும்,
முதுமையின் வலியினையும் எடுத்துரைக்கும்..
வாலிப வரிகள் போட்டு வெறியூட்டுவார்,,
சொல்லுக்குள் செல் புகுத்தி உயிரூட்டுவார்...
தரமான தத்துவத்தை நீ தந்தாய், 
நெஞ்சுக்குள் நிரந்தரமாய் நீ வந்தாய்...
நீ தானே எனக்கு ரோல் மாடல், 
உனை போல எழுதவேண்டும் பல பாடல்...  



மனசுக்குள் இசைப்புயல் மையம் கொண்டதே


எல்லா புயலும் சேதம் தரும்,, 
இப்புயல் மட்டுமே கீதம் தரும்......!! 

எல்லா புயலும் கரையை கடந்து சோதிக்கும் 
இப்புயல் மட்டுமே கடலை கடந்து சாதிக்கும்......!!  

எல்லா புயலுக்கும் பெயர் சூட்டுவார்கள்
இவர் பெயருக்கு முன்னே புயல் சூட்டினார்கள்......!! 

இசைப்புயல் செவியை கடக்கும் போதெல்லாம் 
சேதமடையாத உள்ளங்கள் இல்லை......!!  

உங்கள் ஹார்மோன்களை கேட்டுப் பாருங்கள்
உற்சாகத்தில் குத்தாட்டம் போட்டதை சொல்லும்......!!  

உங்கள் நரம்புகளை கேட்டுப் பாருங்கள்-அவை 
கிட்டார் கம்பிகளை போல் அதிர்வுகளை உணர்த்திருக்கும்......!!  

எல்லா புயலும் வலிமையானது 
இந்த புயல் என்றும் எளிமையானது......





தத்துவம்



தொழிலாளியின் மரணம் Bit News
தொழிலதிபரின் மரணம் Flash News
இதுதாங்க நம்ம உலகம்.....



ஹைக்கூ


பலரின் மனதை புண்படுத்தியும்
பாதுகாப்பாய் தான் இருக்கின்றது 
நாக்கு...



காலநிலை மாற்றம்


உள்ளாடை மேலாடையானது, 
மேலாடை காணமல் போனது..
கலாச்சாரம் காலாவதியானது.... 
பட்டுத் துணி மறைந்து,
பிட்டுத்  துணி உடையானது.....



05 June 2015

டார்வினின் கண்டுபிடிப்பு


பெண்ணே!
மேக்கப் போடாத,
உன் முகத்தை பார்க்கும்போது தான்
டார்வினின் கண்டுபிடிப்பு.
நிஜம் என்பது என்னுள் நிரூபணமானது.....



ஹைக்கூ


தரையில் விழுந்தும்
உடையவில்லை...
நிழல்...



நானிழந்த நிலாச்சோறு


Moon காட்டி சோறூட்டிய
காலம் போய்
Phone காட்டி சோறூட்டும்
காலம் வந்தது
பாவம் யா இந்த குழந்தைங்க.....



04 June 2015

ஹைக்கூ


முற்றிலும் கலப்படம் 
முகப்பிலோ! கலர்படம் 
வியாபார யுக்தி...



ஹைக்கூ


கற்களின்
பரிணாம வளர்ச்சி
கடவுள்...



இதயமற்றவள் நீ


காதலியே!
இதயம் சம்மந்தமான, எந்த நோயும்
உன்னை தாக்காதென,
உன்னை காதலிக்கும்
எனக்கு மட்டும் தான் தெரியும்...
ஏனெனில்,
இதயமற்றவள் நீ....!




தத்துவம்


 பெண்கள் திருமணத்திற்கு பின் 
Aunty- யாகிடுவார்கள்
ஆண்கள் திருமணத்திற்கு பின் 
ஆண்டியாகிடுவார்கள்...



சாதிகள் தொல்லையடி பாப்பா


தேதியை கிழிக்கும் மனிதா
சாதியை ஒழித்தால் என்ன..!
வியாதிகள் போல் இங்கு பரவி
உயிர்களை அழித்திடும் உண்ண...!

ஏழையின் வாழ்வில் ஏற்றம் இல்லை
காரணம் சாதியடா...!
தாழ்த்தப்பட்டோர் என்றே சொல்லி
முடங்குது நீதியடா...!

அட்டை போல ஒட்டிக்கொண்டு
ரத்தம் குடிக்கின்றதே....!
பட்டை தீட்டிய கத்தியை போல
யுத்தம் பிடிக்கின்றதே...!

சாதிகள் இங்கே வந்ததினாலே
நிம்மதி போனதடா....!
சாதிக்கழிவால் சமுத்திரம் கூட
சாக்கடையானதடா....!

மனிதனை மனிதனே அழித்திடவே
மதங்கள் பிறந்ததடா...!
சாதிக் கலவரம் பெருகியதால்
தினம் சாவுகள் கூடுதடா...!

சாதியை அறவே ஒழித்திடுவோம்....
மதங்களை முற்றிலும் அழித்திடுவோம்...
மனிதா இனி நாம் விழித்திடுவோம்....
நாம் மனிதன் என்றே ஒலித்திடுவோம்...



03 June 2015

மூன்றாம் பாலினம்


ஆண்பால்,பெண்பால்
இருபாலுக்கு அப்பாள் ஒருபால்
அப்பால் பிறந்தது
இறைவன் செய்த தப்பால்
திருநங்கை...



02 June 2015

இப்படி நாம் காதலிப்போம்


முத்தமும் வேண்டாம்
யுத்தமும் வேண்டாம்
முழுமனதாய் காதலிப்போம்....!

உனக்கென நான்
எனக்கென நீ-என
முழுமூச்சாய் காதலிப்போம்....!

சாதியை மறந்து
மதத்தினை துறந்து
உயிராய் காதலிப்போம்....!

மோகமும் வேண்டாம்
தாகமும் வேண்டாம்
உயர்வாய் காதலிப்போம்.....!

வலிகளை பகிர்ந்து
கவலையை மறந்து
மகிழ்வுடன் காதலிப்போம்.....!

காதலின் போதே
காமம் தீர்த்திடும்
காதலை நாம் வெறுப்போம்.....!

காதல் என்ற
ஆயுதம் கொண்டு
சாதியை நாம் அறுப்போம்...... 



தத்துவம்


வலியவன் கூட
மெலியவன் தான்
மனதினில் பயமிருந்தால்...

மெலியவன் கூட
வலியவன் தான்
மனதினில் பலமிருந்தால்...



30 May 2015

கவியே என் காதலி


என் கவிதைகள் தான்
எனது காதலி....
அவற்றோடு தான்
தினம், தினம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றேன் 
எனது காதலர் தினத்தை....





நவீன நாகரீகம்


 வீதிகளெல்லாம்
குளியலறை போலவே
காட்சியளிக்கின்றது
அரை,குறை ஆடைகளால்.....




எனது காதல் ஊமையானதே


என் காதலை,
உன்னிடம் சொல்லிட வரும்போதெல்லாம்,
முத்துகளற்ற கொலுசைப் போல்
ஊமையாகிப் போகின்றேன்.....



இருவேறு கோணங்கள்


பசியெடுக்கவில்லை என்பது
பணக்காரனின் பிரச்சனை...
பசியெடுப்பது தான்
ஏழையின் பிரச்சனை..



ஹைக்கூ


விழித்துக்கொண்டே
உறங்கும் வியாதி
கடவுளுக்கும்






28 May 2015

அழகிய ஆயுதம்


என் இதயத்தை, 
குத்திக் கிழிக்கவா
கூர் தீட்டி  வந்தாய் 
உனது புருவங்களை....!



25 May 2015

இவையிரண்டும் போதுமடி


உன்னிடம் நான் எதிர்பார்ப்பது....
இரண்டே இரண்டு தான்...
நான் கேட்பதை,,,
நீ மறுக்காமல் கொடுத்துவிடு.....
நான் கேட்காததை,,,.
நீ மறக்காமல் கொடுத்துவிடு...