கடனால தொல்ல
தெனம் சந்தோஷமில்ல
கண்ணீர் விட்டு நா
கடல் தாண்டி போறான்
குடிகார அப்பன்கிட்ட
அடி வாங்கும் ஆத்தா
அடிவயிறு எரியுது
அவ அழறத பாத்தா
பசியோடு பல நாளும்
பட்டினியா நா கெடந்தான்
பழைய சோறு கெடச்சது போல
பகல் கனா நா கண்டன்
கம்மங்கூல கரச்சி
வெங்காயத்த உரிச்சி
கொடுத்தாலே எனக்கு
குடிச்சன் ரெண்டு மடக்கு
ஆத்தாவுக்கும் வேணுமுன்னு
அளவாத்தான் நான் குடிச்சன்
அவ வயிறு நெறஞ்சதுமே
என் வயிறும் நெறஞ்சிடுதே
நேரத்துக்கு நீ ஒழுங்கா
சாப்பிட்டா போதுமம்மா
உனக்காக தானே - என்
ஒத்த உசுரு வாழுதம்மா
என் நெனப்பால தெனம்
நீ பட்டினியா கெடக்காத
அழுதுகிட்டே அப்படியே
தல சாஞ்சி படுக்காத
சொந்தபந்தம் பலரிருந்தும்
சொல்லும்படி யாருமில்லை
உண்மைய சொல்லனுமுன்னா
உருவினறால எந்த பயனுமில்லை
கட்டுகட்டா காசுருந்து-உன்ன
கடவுளுன்னு சொல்லுமடா
காசிலாம நீ இருந்தா
காரி மூஞ்சில் துப்புமடா
என் தாய காப்பாத்த
நா துபாய்க்கு போறன்
கடனெல்லாம் அடச்சதுமே
நா திரும்பி வாறன்
தெனம் சந்தோஷமில்ல
கண்ணீர் விட்டு நா
கடல் தாண்டி போறான்
குடிகார அப்பன்கிட்ட
அடி வாங்கும் ஆத்தா
அடிவயிறு எரியுது
அவ அழறத பாத்தா
பசியோடு பல நாளும்
பட்டினியா நா கெடந்தான்
பழைய சோறு கெடச்சது போல
பகல் கனா நா கண்டன்
கம்மங்கூல கரச்சி
வெங்காயத்த உரிச்சி
கொடுத்தாலே எனக்கு
குடிச்சன் ரெண்டு மடக்கு
ஆத்தாவுக்கும் வேணுமுன்னு
அளவாத்தான் நான் குடிச்சன்
அவ வயிறு நெறஞ்சதுமே
என் வயிறும் நெறஞ்சிடுதே
நேரத்துக்கு நீ ஒழுங்கா
சாப்பிட்டா போதுமம்மா
உனக்காக தானே - என்
ஒத்த உசுரு வாழுதம்மா
என் நெனப்பால தெனம்
நீ பட்டினியா கெடக்காத
அழுதுகிட்டே அப்படியே
தல சாஞ்சி படுக்காத
சொந்தபந்தம் பலரிருந்தும்
சொல்லும்படி யாருமில்லை
உண்மைய சொல்லனுமுன்னா
உருவினறால எந்த பயனுமில்லை
கட்டுகட்டா காசுருந்து-உன்ன
கடவுளுன்னு சொல்லுமடா
காசிலாம நீ இருந்தா
காரி மூஞ்சில் துப்புமடா
என் தாய காப்பாத்த
நா துபாய்க்கு போறன்
கடனெல்லாம் அடச்சதுமே
நா திரும்பி வாறன்
No comments:
Post a Comment