Search This Blog

31 July 2016

ஹைக்கூ


வடிகட்டியை விட்டு வெளியேறியதும்
நிர்வாணமாகின்றது
பால்...



25 July 2016

ISIS vs EYES


காரணமின்றி தாக்குதல் நடத்துவது 
ISIS  மட்டுமல்ல 
உன் EYES-களும் தான்
 
ISIS -ன்  தாக்குதல்களை விட 
உன் EYES - களின் தாக்குதல்களே 
ஆபத்தானவை....


 
 

21 July 2016

வெட்கவியல்


உன்  வெட்கங்கள் சிந்தியே 
வெட்கக்காடானது 
நீ வசிக்கும் வீதிகள்

உன் ஒரு சொட்டு வெட்கத்தை சிந்து
என் கவிதையின் கடைசி வரிகளை 
நிரப்பிக்கொள்கிறேன்... 


 

20 July 2016

மாயவிழிகள்

 
என்னவளே..!
உன் விழிகளென்ன பெர்முடா முக்கோணமா
அதை கடந்து செல்ல முயற்சிக்கும் போதெல்லாம்
எனைத் தொலைத்துவிடுகிறேன்......



 

18 July 2016

தேன் துளியே...

 
 
என்னவளே...!
நீ உமிழ்ந்த எச்சிலில்
ஈக்கள் மொய்ப்பதில்லை
எறும்புகள் மொய்க்கின்றன......
 
 
 

17 July 2016

ஹைக்கூ


புகை படிந்த  நகரங்களை விட
புழுதி படிந்த கிராமங்கள்
அழகானவை....



16 July 2016

$ - ன் வீழ்ச்சி


காதலியே...!
உன் பளிங்கு கழுத்தில் மின்னும்
சில்வர் டாலரை விடவா..!
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்துவிடப் போகின்றது...