அகத்தியா
Search This Blog
31 October 2016
புனித நூல்
தா
யின் புடவையில்
நெய்யப்பட்ட நூல்களை விடவா
புனிதமானவை
கீதை, குரான்,பைபிள்...
28 October 2016
இதழிசம்
கூ
ட்டத்தில் பேசிக்கொண்டிருக்கையிலும்
கூச்சமின்றி முத்தமிட்டுக்கொள்கின்றன
மேலுதடும்,கீழுதடும்...
காதல்காரி(கை)
நூ
லினை விலங்காக்கி
பூக்களை கைது செய்கின்றாய்
நீ பூக்காரியா....!
இல்லை,
போலீஸ்காரியா...?
25 October 2016
புதைபொருள்
ஆ
ற்று மணலில் புதைந்து கிடக்கும்
உனது பாதச் சுவடுகளை
சேகரிப்பதற்காகத்தான் நடக்கின்றனவோ.....?
மணற்கொள்ளைகள்.....!
24 October 2016
தீண்டாமை
நெ
ருங்கி வந்தும்
எனைத் தீண்டாமல் செல்லும்
என் தேவதையே..!
உனக்கு தெரியாதா...?
தீண்டாமை ஒரு பாவச் செயலென்று....
மழலையர் உலகம்
இ
ழுத்த இழுப்புக்கெல்லாம்
வந்துவிடுவதால் தான்
குழந்தைகள் ஒருபோதும் வெறுப்பதில்லை....
பொம்மைகளை...
17 October 2016
திரு விழிகள்
எ
ன்னவளே...!
உன் கருவிழிகளென்ன பூரிக்கட்டையா
இந்த உருட்டு உருட்டுகின்றாய்...
15 October 2016
அமேசான் அழகிகள்
இ
துவரை
கடற்கரையையே காணாத
பல கிராமத்து அழகிகளின்
பாதங்களை தழுவிய பின்பு தான்
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் சாத்தியப்படும்.....
09 October 2016
சரிவியல்
அ
டிக்கடி சரிந்து விழுவது
சென்னை விமான நிலைய
மேற்கூரை மட்டுமல்ல
உனது துப்பட்டாவும் தான்...
07 October 2016
நூதனக் கொள்(கை)ளை
பு
து மாப்பிள்ளைகளை
கடந்து செல்லும்போதெல்லாம்
குப்பென்று வீசுகின்றது
வரதட்சணை நாற்றம்...
03 October 2016
இடையினம்
கோ
விலில்
நடை சாத்தி வைப்பது போல்
நீ உன் இடை சாத்தி வைக்கிறாய்
எப்போது மீண்டும் கிடைக்கும்
சிறப்பு தரிசனம்...
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)