சிறகுகளுள்ள பறவைகள் நாங்கள்
சிறையில் வாழ்கின்றோம்
சின்னஞ்சிறு பூக்கள் நாங்கள்
சிதறி விழுகின்றோம்
அம்மா என்று சொல்வதற்குள்ளே
ஆங்கிலம் பேசணுமாம்
செந்தமிழ் நாட்டின் முகத்தில்
ஆங்கில கரியைப் பூசனுமாம்
கவலைகளறியா சிறு வயதில்
கலங்கி அழுகின்றோம்
வீட்டுப் பாடம் செய்தே தினம்
மயங்கி விழுகின்றோம்
பால் குடிக்கும் பருவத்தில்
பள்ளிக்கூடம் அனுப்புறாங்க
பச்சப்பிள்ள நாங்க
தொல்ல பண்ணாதீங்க
கல்லூரிக்கு போறவங்க
கைவீசி போறாங்க
பள்ளிக்கூடம் போற நாங்க
பாரத்த சுமக்கரமே
புல்வெளி போன்ற மெல்லிய பாதம்
காலணி சிறையில் சிக்கியதே
பனித்துளி போல குளிர்கிற இதயம்
நெருப்புக் குழம்பை கக்கியதே
முதுகில் மூட்டையை சுமந்து
சாலையில் மெல்ல தவழ்ந்து
பள்ளிக்கு செல்லும் மழலைகள்
மனதிற்குள் பல கவலைகள்
சிறையில் வாழ்கின்றோம்
சின்னஞ்சிறு பூக்கள் நாங்கள்
சிதறி விழுகின்றோம்
அம்மா என்று சொல்வதற்குள்ளே
ஆங்கிலம் பேசணுமாம்
செந்தமிழ் நாட்டின் முகத்தில்
ஆங்கில கரியைப் பூசனுமாம்
கவலைகளறியா சிறு வயதில்
கலங்கி அழுகின்றோம்
வீட்டுப் பாடம் செய்தே தினம்
மயங்கி விழுகின்றோம்
பால் குடிக்கும் பருவத்தில்
பள்ளிக்கூடம் அனுப்புறாங்க
பச்சப்பிள்ள நாங்க
தொல்ல பண்ணாதீங்க
கல்லூரிக்கு போறவங்க
கைவீசி போறாங்க
பள்ளிக்கூடம் போற நாங்க
பாரத்த சுமக்கரமே
புல்வெளி போன்ற மெல்லிய பாதம்
காலணி சிறையில் சிக்கியதே
பனித்துளி போல குளிர்கிற இதயம்
நெருப்புக் குழம்பை கக்கியதே
முதுகில் மூட்டையை சுமந்து
சாலையில் மெல்ல தவழ்ந்து
பள்ளிக்கு செல்லும் மழலைகள்
மனதிற்குள் பல கவலைகள்
No comments:
Post a Comment