Search This Blog

31 January 2017

பிழை எண் 143

ஷாஜகானின் மறைந்து போன 
காதலியை மட்டுமல்ல 
எனை மறந்து போன காதலியையும் 
நியாபகப்படுத்துகிறது 
தாஜ்மஹால்....



28 January 2017

ரெட்டவரி நோட்டு - 1


நீ(ர்) நுழைந்த வீதியில் 
நான் தத்தளிக்கிறேன்...

27 January 2017

கட்டர்

என்னவளே...!
உன் நகங்களுக்கே வலிக்காமல் நகம் வெட்ட என் பற்களுக்கு மட்டும்தான் தெரியும்...



ஹைக்கூ

காய்ந்து கருவாடாவது
மீன்கள் மட்டுமல்ல
மீனவனும் தான்...



26 January 2017

Nail நதி

ரதியே...!
உன் நகங்களை நறுக்கி
நதியினில் எறி
அந்த நதிக்கு
நான் பெயரிட்டுக் கொள்கிறேன்
Nail  நதியென்று...



20 January 2017

முதிர்க(ன்)னி

உளுத்துப் போன உணர்ச்சிகள்
அழுத்துப் போன ஆசைகள்
வெளுத்துப் போன என் வாழ்க்கைக்கு
இனி யாரும்  
வெள்ளையடிக்க வேண்டாம்
இப்படிக்கு முதிர்க்கன்னி... 



13 January 2017

(எ)தை கொண்டாடுகிறோம்

நிலங்களை அழித்து
கட்டிடங்கள் எழுப்பினோம்
செங்கல் வைத்து....

உழவனை அழித்து
தைத்திருநாள்  கொண்டாடுகிறோம்
பொங்கல் வைத்து....



12 January 2017

இடையினம்

குழந்தைகளை மட்டுமல்ல
குடங்களையும் அழகாய் சுமக்கிறது
உன் குட்டி இடுப்பு...

11 January 2017

வலவியல்

உன் மணிக்கட்டுகளோடு
மனம் விட்டு மணிக்கணக்காய் என்ன தான் பேசிக் கொண்டிருகின்றதோ.... உன் கண்ணாடி வளையல்கள்....



09 January 2017

கூந்தலிசம் - 5

உன் ஈரக்கூந்தலை சுருட்டி 
என் இதயத்திற்கு
ஒத்தடம் கொடு......


05 January 2017

அறுவை சிகிச்சை

தவளைகளை அறுக்க
கற்றுக் கொடுத்தது போதும் இனி வரும் பாடத்திட்டத்திலாவது கற்றுக் கொடுங்கள் கவலைகளை அறுக்க....



02 January 2017

ஹைக்கூ

நான்கு கால்களிருந்தும் 
உணர்ச்சியற்று கிடக்கிறது
கட்டில்....