கவலைகள் என்னை சூழ்ந்ததினாலே
கண்ணீர் என்னுள் நிரம்பியதே...!
கனவுகள் தினமும் பூப்பதினாலே
கடமைகள் நிறைய இருக்கிறதே...!
மஞ்சள் தாலியை கட்டியதாலே
மண்டியிட்டே கிடக்கின்றோம்...!
மான ரோஷம் இருந்தும் ஏனோ
மௌனம் மட்டும் காக்கின்றோம்...!
ஆட்டிப்படைக்கும் மனைவியிடத்தில்
அடங்கிச் செல்வது ஆண்களடா...!
ஆடம்பரத்தை விரும்பும் பெண்ணால்
ஆண்களின் நிலையோ ஆண்டியடா...!
அச்சம், மடம், நாணம் இருந்தது
அன்றைய கால பெண்ணிடத்தில்,
கட்டிய கணவனை எட்டி உதைத்து,
கலவரம் தூண்டும் பெண்ணின்று...!
திருமணம் என்பதே சோகமடா,- அதில்
ஆண்களின் நிலை தான் பாவமடா...!
பணியை முடித்து இல்லம் நுழைந்ததும்
பணிந்து போவதே வழக்கமடா...!
இதயம் மரித்த பெண்ணினத்தால்
இன்பம் தொலைத்தது ஆணினங்கள்...!
இறைவா விழியை திறந்து விடு
இனிமேல் வெளிச்சம் பிறக்கட்டும்....

No comments:
Post a Comment