Search This Blog

27 September 2017

கிலோபைட் கிறுக்கல்கள - 28

காற்றில் அசையும்
சமாதானக் கொடியாய்
நரை முடிகள்..!

பூமியை நோக்கியே
கவிழ்ந்துக்கிடக்கி்றது
தலை...!
உற்று நோக்கினும்
மங்கலாய் விரியும்
பார்வை..!

கத்தி அழைப்பினும்
கண்டுக் கொள்ளாத
காது...!

நட்சத்திரங்களற்ற
இருளடர்ந்த வானமாய்
பொக்கை வாய்...!

மெலிந்த
ஒட்டடைக் குச்சியாய்
கைகளும்,கால்களும்,...!
நதிகளைப் போலவே
வற்றிக்கிடக்கிறது
வயி்று...!

மூங்கிலைப் போலவே
வளைந்துக்கிடக்கிறது
முதுகு...!
வலுவிழந்த வேர்களாய்
படர்ந்திருக்கிறது
நரம்புகள்...

முதுமையின் கொடுமையை
வேண்டாமென்கிறதோ...???
நடுங்கும் தலையசைவுகள்...

உள்ளங்கைகளின் ரேகையனைத்தும்
இடம் பெயர்ந்து,
உடலெங்கும் அப்பிக்கிடக்கிறது...

சுருக்கம் என்பதை
சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில்,
அது முதுமையின்
அடையாளக் குறியீடுகள்...

மகன்களும்,மகள்களும்
புறக்கணிக்க
மருந்துகளும்,மாத்திரைகளும்
அரவணைக்கிறது...

முக் கால்களில் நடக்கும்
இக்காலமதில்,
முற்றிலும் உணர்கிறேன்
முதுமையின் வலியை...

கருணை மனம் இல்லை
பிள்ளைகள் உள்ளத்தில்...
காத்திருக்கிறேன் நான்
முதியோர் இல்லத்தில்.....



No comments:

Post a Comment