Search This Blog

18 July 2015

நெருப்பில்லாமல் புகையாது ---- வித்தியாசமான முயற்சி


சால்ட் நிறத்தில் நானிருந்தாலும்
உன் பெப்பர் நிறம்தானடா எனக்கு பிடிக்கின்றது....!
Oil வடியும் உன் முகத்தை கண்டால் தானடா
என் ஆயுட்காலம் அழகாகின்றது....!

காதலிக்க தேவையானவை,,
போதுமான அளவு வலிகள்
ஒரு கப் புன்னகை
தேவைக்கேற்ப சண்டைகள்
இரண்டு அல்லது மூன்று டீஸ்பூன் கண்ணீர்

ஒரு டீஸ்பூன் அளவாவது சிரி
அதை நினைத்துக்கொண்டாவது,
நான்  உயிர் வாழ்ந்துவிடுகின்றேன்....!

நான் உயிர் வாழ தேவையான அளவு சர்க்கரை,
நீ கொடுக்கும் முத்தத்தில் தானடா இருக்கின்றது....
 
 
நீ பேசும் பேச்சில், 
நான் சாதமாய் குழைகின்றேன்....
நெய்யாய் உருகி உருகி,
உனை காதலிக்கின்றேன்.....!

என் அப்பள இதயத்தை,
நொறுக்கி விடாதே.....!
என் கண்கள் அவ்வப்போது
கண்ணீரை வடிகட்டுகின்றது

கடுகு தாளிப்பது போல்
ஏன் என்னை தாளித்தெடுக்கின்றாய்....? 
இடியாப்பத்தை விட சிக்கலானது
என் வாழ்க்கை....!

என் மனம் தேங்காய் துருவலை போல்
மென்மையானது....!
என் காதல் ஆப்பாயில் போல்
ஒரு தலையானது....!

மெல்லவும் முடியாமல்
முழுங்கவும் முடியாமல்
தொண்டையில் சிக்கிய மீன் முள்ளாய்
வார்த்தைகள் சிக்கித் தவிக்கின்றன
உனை காணும்போதெல்லாம்

காரசாரமாய் நீ பேசும்போதெல்லாம்
வெங்காயம் அரியாமலேயே
கண்ணீர் விடுகின்றேன்

நானென்ன கசாயமா
பிறகேன் எனைப் பார்த்தாலே
நீ முகம் சுளிக்கின்றாய்

பாலில் கலந்த தண்ணீரைப் போல் தான்
என்னுள் இருக்கும் நீ,,, 
என்னிடமிருந்து உனைப் பிரிப்பது
அவ்வளவு சுலபமல்ல.....

கருவேப்பிலையாய் என் இதயத்தை
நீ உருவி எடுத்துக்கொண்டதால் தான்
நான் கொத்தமல்லியாய்  வதங்கிக்கிடக்கின்றேன்....

பெருங்காயமில்லா உணவில்
சுவையில்லை....!
பெரும்காயமில்லா மனதில்
சுகமில்லை....!

எளிதில் கெடாத புளியோதரையாய்
என் கற்பு மட்டும்
அதை உனக்கு மட்டுமே பரிமாற விரும்புகின்றேன்....!



குறிப்பு : படிப்பறிவில்லா ஒரு சமையல்காரி தன் காதலனுக்கு அவளுக்கு தெரிந்த வார்த்தையை கொண்டு ஒரு கவிதை எழுதுகின்றாள்......



No comments:

Post a Comment