கண்மூடி கண் திறந்தாள்
கண்முன்னே வந்து நிற்ப்பாள்
கண்ணசந்து நானுறங்க
கனவிளவள் தொல்லை செய்வாள்
தொலைவிலுள்ள அவளிடம்
தொலைத்து விட்டேன் இதயத்தை
தொடர்வண்டியாய் நீளுதே
தொலையாத உன் நினைவுகள்
பட்டுடுத்தி நீ நடந்தால்
பாற்கடலும் மயங்கிவிடும்
பாவையிவள் சிரிக்கையிலே
பாவி மனம் சிக்கிவிடும்
உன்னை நான் நினைக்கையிலே
உடலெல்லாம் சிலிர்க்குதடி
உன்னுடன் நான் வாழ்ந்து
உனக்கு முன் இறப்பேனடி
மனசுக்குள்ளே நீயிருக்க
மற்றவளுக்கு இடமில்லையடி
மரணமில்லா நம் காதலுக்கு
மதிப்பெண் பல கோடியடி
சாயம் போகாத காதலுக்கு
சாவென்பதே இல்லையடி
சாகாமல் நான் வாழ
சகியே நீ வேண்டுமடி
!!!===((( ராஜ்கமல் )))===!!!
!!!===((( ராஜ்கமல் )))===!!!
No comments:
Post a Comment